சினிமா செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால் + "||" + Raised salary Kajal Agarwal

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்

சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களை தாண்டுகிறது. ஆரம்பத்தில் சிறிய படங்கள், சிறிய வேடங்கள்தான் கிடைத்தன.
 அதன்பிறகு அவரது படங்களுக்கு ஏற்பட்ட வரவேற்பை வைத்து மளமளவென உயர்ந்தார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியானார். இதனால் மார்க்கெட் உயர்ந்தது.

கடந்த வருடம் காஜல் அகர்வால் நடிப்பில் விவேகம், மெர்சல் படங்கள் வந்தன. தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்தன. இப்போது இந்தி குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதுவரை ரூ.1 கோடியும் அதோடு சேர்த்து அதிகமாக ரூ.25 லட்சம் என்றும் சம்பளம் வாங்கி வந்த அவர் தற்போது ஊதிய தொகையை மேலும் கூடுதலாக உயர்த்தி இருக்கிறார்.


புதிதாக ஒப்பந்தமாகி உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் சம்பளம் பேசி இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.