சினிமா செய்திகள்

தூத்துக்குடியில் மவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் ; படம் எப்படி உள்ளது ரசிகர்கள் கருத்து + "||" + Kaala movie review and ratings: Live audience response

தூத்துக்குடியில் மவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் ; படம் எப்படி உள்ளது ரசிகர்கள் கருத்து

தூத்துக்குடியில் மவுன அஞ்சலிக்கு பின் காலா திரைப்படம் ; படம் எப்படி உள்ளது  ரசிகர்கள் கருத்து
ரஜினிகாந்தின் காலா திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து கூறி உள்ளனர்.
சென்னை

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது.  இந்த பட்டம் உலகம் முழுவதும் மிகவும் சாதகமான விமர்சனங்களை மற்றும் தரவரிசைகளை  ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 கன்னட அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக கர்நாடகாவில் காலா படம் வெளியாகவில்லை. தியேட்டர் வாசலில் அந்த அமைப்பினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

தூத்துக்குடியில் உள்ள தியேட்டர்களில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தவர்களுக்கு ரசிகர்கள் மவுன அஞ்சலி செலுத்திய பின்பே படம் திரையிடப்பட்டது. 

பெங்களூரில் காலா திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டருக்குள் புகுந்து ஊழியரை ஹெல்மெட்டால் விஷமிகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ரஜினிகாந்தின் கால திரைப்படம் குறித்து ரசிகர்கள் கூறியவற்றில் சில

 * ரஜினிகாந்த் அறிமுகமாகும் காட்சி 
* மழை சண்டைக்காட்சி  எந்திரன் ரெயில் சண்டைகாட்சிக்கு இணையாக இருப்பதாக கூறப்படுகிறது.
* சந்தோஷின் பிஜிஎம்( BGM)
* ரஜினிகாந்த்- வில்லன் நானா படேகர் மோதல் காட்சி  
* காலா-ஜரினா பிளாஷ்பேக் காட்சிகள்
* ரஜினிகாந்துக்கு உரிய ஸ்டைல்-  பஞ்ச் வசனங்கள் மிஸ்ஸிங்

* தொழில் நுட்பம் ஆகட்டும், நடனம், பாடல், குடிசைப் பகுதி செட் அமைத்து இருப்பது, ஆர்ட் என்று அனைத்தும் காலா படத்தில் பிரமாதமாக அமைத்துள்ளார் ரஞ்சித். எடிட்டிங் பேச வைக்கும், அந்தளவிற்கு துல்லியமாக எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது. 
 
ரஜினிகாந்தின் காலா அவருக்கு ஒரு ப்ளாக்பஸ்டர் படமாக, சூப்பர் டூப்பர் படமாக அமையும் 


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது என அதிகாரபூர்வமாக் அறிவிக்கப்பட்டு உள்ளது. #Petta #Rajinikanth
2. சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
3. இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார் -நடிகர் ரஜினிகாந்த்
இயக்குனர் ஷங்கர் 2.0 திரைப்படத்தை உலகளவில் கொண்டு சென்றுள்ளார் என டிரைலர் வெளியிட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
4. ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் -கமல்ஹாசன் வாழ்த்து
ரஜினிகாந்தின் திரைப்பட வரலாற்றில் 2.0 ஒரு மைல் கல் என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
5. ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.