சினிமா செய்திகள்

சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா + "||" + Only Thalaivar can do this’: Rajinikanth’s 'Kaala' becomes first Indian film to be released in Saudi Arabia in decades

சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா

சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல்  இந்தியப் படம் காலா
35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் வெளியாகிய முதல் இந்தியப் படம் காலா. #Kaala #Rajinikanth
சென்னை

பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியானது. சென்னை மற்றும்  புறநகர்களில் இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

இந்த சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்ட திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதே.போல் சென்னை நகரில் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் வெளியிடப்பட்டன.

சென்னையில் ரஜினியின் காலா படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரச்சனை எதுவும் ஏற்படாமல் தடுக்க தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகா தவிர உலகெங்கும் வெளியாகியுள்ள காலா படம், சவுதி அரேபியாவிலும் தற்போது வெளியாகியுள்ளது.

 சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் என்கிற பெருமையை காலா பெற்றுள்ளது.

1980களில் சவுதி அரேபியாவில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டன. மத அமைப்புகளிடமிருந்து வந்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்தத் தடையை நீக்குவதாகக் கடந்த வருடம் சவுதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து சமீபத்தில் ரியாத்தில் 35 வருடங்கள் கழித்து ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டது. பிளாக் பாந்தர் - ஹாலிவுட் படம் முதலில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து சவுதி அரேபியாவில் காலா படம் வெளியாகியுள்ளது. இத்தகவலை காலா படத்தைத் தயாரித்துள்ள வுண்டர்பார் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் 2.0 வெளியிடுவோம் : தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
சர்கார் படத்தை வெளியிட்டது போல் ரஜினிகாந்தின் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளனர்.
2. சர்கார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
சரக்கார் பட இயக்குனர் ஏ.ஆர் முருகதாசை கைதுசெய்ய தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிடு உள்ளது
3. சர்கார் பட விவகாரம்: ரஜினிகாந்த் டுவிட்டரில் கண்டனம்
சர்கார் பட விவகாரம் தொடர்பாக, ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
4. கவர்ச்சி புகைப்படங்கள்: கவுரமாக வாழ விடுங்கள் - அக்‌ஷராஹாசன் வேண்டுகோள்
கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது எனது மனதை பாதித்து விட்டது என்றும் கவுரமாக வாழ விடுங்கள் என அக்‌ஷராஹாசன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல்
உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சர்கார் முதல் நாள் ரூ. 66.6 கோடி வசூல் செய்துள்ளது. வசூலில் சர்கார் நான்காவது மிகப்பெரிய தென் இந்திய படமாக உள்ளது.