சினிமா செய்திகள்

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது + "||" + Rajinikanth-Karthik Subburaj The film started shooting

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. #Rajinikanth #KarthikSubburaj
டார்ஜிலிங்: 

ரஜினி நடித்துள்ள காலா படம் இன்று ரிலீஸாகியது. இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படம் இன்னும் வெளியாகவில்லை, சில தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அதன் ரிலீஸ் தேதி தள்ளி போகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்தி சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்கிறார். சன் பிக்ஸர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கும் படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் டார்ஜிலிங் செல்லும் வழியில் அவருடன் விமான ஊழியர்கள்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர் .

இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி டார்ஜிலிங் சென்றார். அப்போது விமானத்தில் விமான ஊழியர்கள் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயது குறைந்தவராக நடிப்பதாக அவரது கெட்டப்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...