சினிமா செய்திகள்

3 மொழிகளில் தயாராகும் ‘குயின்’ படத்தில் காஜல், தமன்னா, பாருல் + "||" + Made in 3 languages 'Queen' film Kajal, Tamanna, and Barul

3 மொழிகளில் தயாராகும் ‘குயின்’ படத்தில் காஜல், தமன்னா, பாருல்

3 மொழிகளில் தயாராகும் ‘குயின்’ படத்தில் காஜல், தமன்னா, பாருல்
குயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர்.
கங்கனா ரணாவத் நடிப்பில் 2014-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தி படம் ‘குயின்.’ கதாநாயகர்கள் படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை படைத்தது. ரூ.12 கோடி செலவில் எடுக்கப்பட்டு ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இந்த படத்துக்கு பிறகுதான் கங்கனாவின் மார்க்கெட்டும் சம்பளமும் மளமளவென உயர்ந்தது.

குயின் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கின்றனர். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் கங்கனா ரணாவத் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். கன்னடத்தில் பாருல் யாதவ் நடிக்கிறார். இந்த 2 மொழிகளிலும் ரமேஷ் அரவிந்த் டைரக்டு செய்கிறார்.

தெலுங்கு பதிப்பில் தமன்னா நடிக்க தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. காஜல் அகர்வால், தமன்னா, பாருல் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு நடித்தனர்.