சினிமா செய்திகள்

ஆபாச வீடியோ வெளியிடுவாரா? நடிகர் நானிக்கு ஸ்ரீரெட்டி திடீர் மிரட்டல் + "||" + Shri Reddy's sudden threat

ஆபாச வீடியோ வெளியிடுவாரா? நடிகர் நானிக்கு ஸ்ரீரெட்டி திடீர் மிரட்டல்

ஆபாச வீடியோ வெளியிடுவாரா?
நடிகர் நானிக்கு ஸ்ரீரெட்டி திடீர் மிரட்டல்
நடிகர் நானியின் மோசமான படங்கள் விரைவில் வெளியாகப் போகிறது என்று ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகார்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய திரையுலகை திக்குமுக்காட வைத்தது. பிரபல டைரக்டர் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகை ஜீவிதாவின் கணவரும் நடிகருமான ராஜசேகர் ஆகியோர் அவரது செக்ஸ் புகார் சர்ச்சையில் சிக்கினார்கள். சமூக வலைத்தளத்தில் ஸ்ரீலீக்ஸ் பக்கத்தை உருவாக்கி ஆபாச படங்களையும் வெளியிட்டார்.

தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். அவருக்கு படங்களில் நடிக்க தடை விதித்தனர். மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக களம் இறங்கியதும் தடையை வாபஸ் பெற்றனர். பெண்கள் சங்கமும் ஸ்ரீரெட்டி பக்கம் நிற்கின்றன. திரையுலகில் நடக்கும் செக்ஸ் துன்புறுத்தல்கள் குறித்து அரசும், தெலுங்கு நடிகர் சங்கமும் குழுக்கள் அமைத்து விசாரிக்கின்றன.

சில நாட்கள் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது மீண்டும் செக்ஸ் புகார் கிளப்பி உள்ளார்.

தமிழில் வந்த நான் ஈ படத்தில் நடித்து பிரபலமான நானியும் இதில் மாட்டினார். நானி ஒரு பெண் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளி விட்டார். பல பெண்கள் அவரால் ஏமாந்து உள்ளனர் என்றார்.

நடிகர் நானியின் மோசமான படங்கள் விரைவில் வெளியாகப் போகிறது அதை காண காத்திருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது பட உலகை அதிர வைத்துள்ளது.

நானியின் ஆபாச வீடியோ ஸ்ரீரெட்டியிடம் இருக்கலாம் என்றும் அதை வெளியிடப்போவதாகத்தான் அவர் மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் தெலுங்கு பட உலகினர் பரபரப்பாக பேசி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
2. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
‘மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.
3. ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை
ஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.
4. ‘‘தமிழ் படங்களில் நடிக்க ஆசை’’ –ஸ்ரீரெட்டி
தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
5. வீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி
சமீபகாலங்களில் ஆந்திராவில் அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால், அது ஸ்ரீரெட்டிதான்.