சினிமா செய்திகள்

‘காலா’வில் ரஜினியுடன் நடித்த நாயை ரூ.2 கோடிக்கு வாங்க போட்டி + "||" + kaala movie acting dog

‘காலா’வில் ரஜினியுடன் நடித்த நாயை ரூ.2 கோடிக்கு வாங்க போட்டி

‘காலா’வில் ரஜினியுடன் நடித்த நாயை ரூ.2 கோடிக்கு வாங்க போட்டி
காலா படத்தில் ரஜினிகாந்த் ஓட்டி வரும் ஜீப்புக்கும், அவருடன் சேர்ந்து நடித்த நாய்க்கும் திடீர் மவுசு ஏற்பட்டு உள்ளது.
காலா படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை வாங்க வெளிநாடுகளில் உள்ள பணக்காரர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவுகிறது. படப்பிடிப்பு நடந்தபோதே அதை விலைக்கு வாங்க பேசினார்கள். ஆனால் பயிற்சியாளர் விற்க மறுத்து விட்டார்.

இப்போது காலா திரைக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் நாயை வாங்க வெளிநாட்டு ரசிகர்கள் விலை பேசி வருகிறார்கள். ரூ.2 கோடி வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். காலா படப்பிடிப்பு தொடங்கியபோது 30 நாய்களை வரவழைத்து குறிப்பிட்ட இந்த நாயை தேர்வு செய்தனர்.

இதற்கு மணி என்றும் பெயர் வைத்தனர். முதல் நாள் சூட்டிங்கில் இந்த நாய்க்கு ரஜினி பிஸ்கட் கொடுத்தார். அதன்பிறகு படப்பிடிப்புக்கு அவர் வரும்போதெல்லாம் வாலை ஆட்டியபடி அருகில் சென்று அமர்ந்து கொள்ளுமாம். ரஜினி கேரவேனுக்குள் இருக்கும்போதும் வெளியே படிக்கட்டு அருகிலேயே நின்றுள்ளது. நாய் மீது ரஜினியும் பாசம் காட்டினார்.

படப்பிடிப்பு முடிந்ததும் அந்த நாயை உரிமையாளர் டி.வி தொடர்களில் நடிக்க அனுப்பி வருகிறார்.

இதுபோல் காலாவில் ரஜினி பயன்படுத்திய ஜீப்பை அதை தயார் செய்த நிறுவனம் நடிகர் தனுசிடம் இருந்து வாங்கி மும்பை அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே அண்ணாமலை படத்தில் ரஜினி பயன்படுத்திய சைக்கிளுக்கும் இதேபோல் பல லட்சங்கள் விலை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.