சினிமா செய்திகள்

ரஜினி - ஷங்கரின் 2.0 படம் 2018 ஆம் ஆண்டில் வெளியாகாது மீண்டும் தள்ளி போகிறது? + "||" + Rajinikanth and Akshay Kumar starrer 2.0 pushed to 2019?

ரஜினி - ஷங்கரின் 2.0 படம் 2018 ஆம் ஆண்டில் வெளியாகாது மீண்டும் தள்ளி போகிறது?

ரஜினி - ஷங்கரின் 2.0 படம்  2018 ஆம் ஆண்டில் வெளியாகாது மீண்டும் தள்ளி போகிறது?
ரஜினி - ஷங்கரின் 2.0 படம் 2018 ஆம் ஆண்டில் வெளியாகாது என்றும் அடுத்த வருடம் தான் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. #Rajinikanth #AkshayKumar
ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.

கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்நிலையில் இந்த வருடம் 2.0 படம் வெளியாக வாய்ப்பில்லை என்று மும்பை ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பல காட்சிகளுக்கு விஎஃப்எக்ஸ் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் இந்த வருடம் வெளியாகாது, அதற்குப் பதிலாக அடுத்த வருட ஆரம்பத்தில் 2.0 படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹாலிவுட் படங்களின் தரத்தில் காட்சிகள் அமையவேண்டும் என்று ஷங்கர் விருப்பப்படுவதால் அதன்படியே காட்சிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தாமதத்தால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியிருப்பதாகத் தெரிகிறது. இந்த வருட இறுதியில் படத்தின் வெளியீடு குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.