ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை


ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
x
தினத்தந்தி 9 Jun 2018 11:29 PM GMT (Updated: 9 Jun 2018 11:29 PM GMT)

ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில், நடிகர் தனுஷ் தயாரித்த ‘காலா’ படம் கடந்த 7-ந் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் 2,500 தியேட்டர்களில், ‘காலா’ படம் திரையிடப்பட்டுள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் படம் வசூல் சாதனை புரிந்து இருக்கிறது.

இந்த நிலையில், ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், தமிழ் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று, ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை வைத்து இருக்கிறார்கள். ‘காலா’ படம் வெளியான கடந்த 7-ந் தேதி, இந்த சிலை நிறுவப்பட்டது.

55 கிலோ எடையும், 5.9 அடி உயரமும் கொண்ட ரஜினிகாந்த் சிலையை 3 மாதங்களில் உருவாக்கி இருக்கிறார்கள். ‘படையப்பா’ ரஜினிகாந்தின் இந்த சிலையை பார்க்க தமிழ் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள். 

Next Story