சினிமா செய்திகள்

ஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் 2வது இடம் வகிக்கும் காலா + "||" + Kaala box office collection Day 5: Rajinikanth film now second highest grosser of 2018

ஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் 2வது இடம் வகிக்கும் காலா

ஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் 2வது இடம் வகிக்கும் காலா
ஆஸ்திரேலியாவில் பாகுபலியை அடுத்து வசூலில் இந்திய படங்களில் காலா 2வது இடம் வகிக்கிறது. #Kaala #Bahubali #Rajinikanth
சிட்னி

ரஜினிகாந்தின் காலா முதல் நாளில் தமிழ்நாட்டின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு நல்ல  தொடக்கத்தை பெற தவறிவிட்டதாகவே கூறப்படுகிறது. காலா தமிழகத்தில்  650 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ,அதே நேரத்தில் உலக அளவில் 2,500  திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது.

முதல் நாள் காலா வசூல் 15.4 கோடி ரூபாயில் முடங்கியது.   ரஜினிகாந்தின் முந்தைய படமான கபாலியை விட இது மிகக் குறைவானது,கபாலி  முதல் நாளில் வசூல்  ரூ. 21.5 கோடியாக இருந்தது.

ரஜினிகாந்தின் திரைப்படமான 'காலா' பைரசி மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளாக முழுத் திரைப்படமும் டோரண்ட் இணையதளத்தில் லிக் ஆகி உள்ளது. திரைப்படங்கள் சர்வதேச மையங்களில் முதல் காட்சி வெளியாக  சில மணி நேரங்களுக்குப் பிறகு, தமிழ் ரோகர்ஸ் போன்ற இணைய தளங்கள் அந்தப் படத்தை  லீக் செய்து இருந்தன. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் திரைப்படத்தின் வசூலில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது  என கூறப்படுகிறது.

ஐந்து நாட்களில் இந்த படம் சென்னையில் மட்டுமே ரூ. 7.23 கோடி வசூலித்துள்ளது.வர்த்தக அறிக்கையின்படி, காலா வெளிநாட்டு சந்தையில் மிகவும் நன்றாக உள்ளது.ஆஸ்திரேலியாவில், இந்த படம் நான்கு நாட்களில் 2.04 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. ஆஸ்திரேலியாவில்  அதிக வசூல் செய்த  இரண்டாவது இந்திய படம் காலா.

வர்த்தக ஆய்வாளர் தாரன் ஆதர்ஷ்  கூறிய ஆஸ்திரேலியா  2018ல் டாப் 5   

1. #பத்மாவதிA $ 1,728,642 (இந்தி + தமிழ் + தெலுங்கு)
2. # காலா A $ 402,213
3. #வீடி வெட்டிங் A $ 341,118
4. #பாரத் அனே நேனு [தெலுங்கு] A $ 339,133
5. # கேரி ஆன் ஜட்டா 2 [பஞ்சாபி] A $ 327,736 (sic) "