சினிமா செய்திகள்

பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ் + "||" + Sexual complaint: Actor Nani notices to Srireddy

பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ்

பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ்
தன்னைப் பற்றி பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டிக்கு நடிகர் நானி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று சொல்லி இந்திய பட உலகையே அதிர வைத்த தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது நடிகர் நானியை பாலியல் சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பான புகார்கள் கூறி வருகிறார். ‘நான் ஈ’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நானி.


வெப்பம், ஆஹா கல்யாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். நானி ஒரு நடிகையின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடிக்க கூடியவர் என்று ஏற்கனவே ஸ்ரீரெட்டி சாடி இருந்தார். இந்த நிலையில் தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் டி.வி நிகழ்ச்சியில் ஸ்ரீரெட்டியை கலந்து கொள்ள விடாமல் தடுத்ததாக தகவல் வெளியானது.

இதனால் ஆத்திரமான ஸ்ரீரெட்டி மீண்டும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார். “நானி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடந்து கொண்டார். என்னுடன் படுக்கவில்லை என்று சத்தியம் செய்ய நானி தயாரா? எனக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார். எனது பாவம் அவரை சும்மா விடாது.” என்று பரபரப்பாக ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.

இதற்காக ஸ்ரீரெட்டிக்கு நானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

“என் மீது ஸ்ரீரெட்டி அவதூறுகள் பரப்பி வருகிறார். அதில் உண்மை இல்லை. இத்தகையை செயல்கள் வருத்தம் அளிக்கின்றன. எனது நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பொய்யான தகவல் பரப்புவதை அவர் நிறுத்த வேண்டும். இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். ஒரு வாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடரப்படும்.” இவ்வாறு நானி கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டி-நானி மோதல் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
‘மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.
2. பாலியல் புகார் கூறிய பெண் மீது அவதூறு வழக்கு: மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்தார்
தன்மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு வழக்கை மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தாக்கல் செய்தார்.
3. பாலியல் புகார்களால் பதவி விலக எம்.ஜே. அக்பர் மறுப்பு; ‘பாலியல் வன்முறையாளர்களை அரசு பாதுகாக்கிறது’ காங்கிரஸ் சாடல்
எம்.ஜே. அக்பர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ், அரசு பாலியல் வன்முறையாளர்களை பாதுகாக்கிறது என சாடியுள்ளது.
4. அடுக்கடுக்கான பாலியல் புகார்: ‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு
அடுக்கடுக்கான பாலியல் புகார் காரணமாக, மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் உண்மையை உரக்க சொல்லும் நேரம் இது என கருத்து தெரிவித்துள்ளார்.
5. இந்தியாவில் பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களுக்கு ஆபத்து? பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் கும்பல்
பாலியல் இணையதளங்களைப் பார்ப்பவர்களின் அந்தரங்க தகவல்களை திருடி அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் புதிய சைபர் கிரைம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.