சினிமா செய்திகள்

ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது நடிகை பாலியல் புகார் + "||" + Actress Sexual complaint on Hollywood action actor Sylvester Stallone

ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது நடிகை பாலியல் புகார்

ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது நடிகை பாலியல் புகார்
ஹாலிவுட் சினிமா பிரபலங்கள் பாலியல் புகார்களில் சிக்கி உலக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
 ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர்களை படுக்கையில் செக்ஸ் வன்கொடுமைகள் செய்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.


ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, கைன்த் பால்ட்ரோ, காரா டெலவிங்கினி உள்பட பல நடிகைகள் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது செக்ஸ் புகார்களை தெரிவித்தனர். மொத்தம் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறினார்கள். இது குறித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடக்கிறது.

இந்த பிரச்சினைக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ‘மீ டூ’ என்ற ‘ஹேஸ்டேக்’ உருவாக்கப்பட்டது. இதில் பாலியல் கொடுமைக்கு உள்ளான நடிகைகள் தங்கள் புகார்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் அதிரடி கதாநாயகன் சில்வஸ்டர் ஸ்டாலோன் மீதும் திடீர் செக்ஸ் புகார் கிளம்பி உள்ளது.

சில்வஸ்டர் ஸ்டாலோனுக்கு இப்போது 71 வயது ஆகிறது. இவர் ராக்கி, ராம்போ, த எக்ஸ்பெண்டபிள் வரிசை படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவரது அதிரடி சண்டை காட்சிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். 1990-ம் ஆண்டு சில்வஸ்டர் ஸ்டாலோன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ஒருவர் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் புகார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். இது ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
பாலியல் புகாரில் நீக்கப்பட்ட ஆயுதப்படை உயர் அதிகாரிக்கு மீண்டும் பணி இல்லை என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. கல்லூரி மாணவி பாலியல் புகார்: மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
கல்லூரி மாணவி பாலியல் புகார் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
3. ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நெல்லை பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார் உயர்மட்ட குழு அமைத்து விசாரணை
நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவியிடம் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
4. பாலியல் புகார் குறித்து அடுத்தவர்கள் பேசிக் கொண்டு இருப்பது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி
பாதிக்கப்பட்ட பெண்ணே சம்பவத்தை மறக்க விரும்பும்போது பாலியல் புகார் குறித்து அடுத்தவர்கள் பேசிக் கொண்டு இருப்பது ஏன்? என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
5. பாலியல் புகார் கூறிய பெண் மீது அவதூறு வழக்கு: மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்தார்
தன்மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளருக்கு எதிராக அவதூறு வழக்கை மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தாக்கல் செய்தார்.