சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆண் குழந்தை + "||" + Jr NTR is a male baby born

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆண் குழந்தை

ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆண் குழந்தை
பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் மறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ராமராவின் பேரன் ஆவார்.
ஜூனியர் என்.டி.ஆர்- லட்சுமி பிரணதிக்கும் திருமணம் 2011-ல் நடந்தது. இவர்களுக்கு அபய்ராம் என்ற ஆண்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் லட்சுமி பிரணதி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளியிட்டார். அவருக்கு தெலுங்கு நடிகர்-நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.

ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்தி வருகிறார்கள்.