சினிமா செய்திகள்

டிரெய்லருக்கு பாராட்டு குள்ள மனிதராக ஷாருக்கான் + "||" + Appreciate the trailer Shah Rukh Khan is a Dwarf man

டிரெய்லருக்கு பாராட்டு குள்ள மனிதராக ஷாருக்கான்

டிரெய்லருக்கு பாராட்டு குள்ள மனிதராக ஷாருக்கான்
இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு கமல்ஹாசனைப் போல் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிப்பதில் ஆர்வம் உண்டு.
கதாபாத்திரத்துக்காக உடலை வருத்தவும் செய்வார். தற்போது ‘ஜீரோ’ என்ற இந்தி படத்தில் குள்ள மனிதராக நடித்து வருகிறார். இதேபோன்ற வேடத்தில் ஏற்கனவே கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்துள்ளார்.

அதுதான் ஷாருக்கானுக்கு இந்த கதாபாத்திரத்தை ஏற்க தூண்டுகோலாக இருந்துள்ளது என்கின்றனர். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடித்துள்ளனர். தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ’தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் ஜீரோ படத்தை டைரக்டு செய்துள்ளார்.


இதில் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் கவுரவ தோற்றத்தில் வருகிறார். 10 வருடங்களுக்கு பிறகு இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதனால் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் இப்போது வெளியாகி தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேடையில் சல்மான்கானுடன் குள்ளமாக வரும் ஷாருக்கான் வேகமாக நடனம் ஆடுவது போன்றும் சல்மான்கான் இடுப்பில் ஏறி அமர்ந்து கொள்வது போன்றும் டிரெய்லரில் காட்சிகள் இருந்தன. “டிரெய்லரில் கம்பீரமான ஷாருக்கானை பார்க்க முடிந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று தனுஷ் டுவிட்டரில் கூறியுள்ளார். 

ஆசிரியரின் தேர்வுகள்...