சினிமா செய்திகள்

மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்த சமந்தா கோலிவுட்டில் பரபரப்பு + "||" + Nagarjuna and Amala celebrate their 25th wedding anniversary in style

மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்த சமந்தா கோலிவுட்டில் பரபரப்பு

மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்த சமந்தா கோலிவுட்டில் பரபரப்பு
குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நடிகை சமந்தா படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
சென்னை,

நடிகை சமந்தாவின் மாமனாரும், பிரபல நடிகருமான நாகார்ஜூனாவும் அவருடைய மனைவி அமலாவும் தங்களது 25-வது ஆண்டு திருமண நாள் விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய குடும்ப நண்பர்கள், திரையுலகினர்,  பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.  இந்த நிகழ்ச்சியில் நாகார்ஜூனாவின் மகன்கள், நாகசைதன்யா மற்றும் அகிலும் கலந்து கொண்டனர். ஆனால் மூத்த மருமகளான சமந்தா மட்டும் கலந்து கொள்ள வில்லை. 

விழாவில் வந்த பலர் மூத்த மருமகள் சமந்தா எங்கே?  என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெற்றோரின் திருமண நாள் அன்று எடுத்த புகைப்படத்தை  நடிகர் அகில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்தவர்கள் சமந்தா எங்கே காணவில்லை என அகிலிடம் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருந்துள்ளார். பின்னர் சமந்தா படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறப்பட்டது. அதனால் 25-வது ஆண்டு திருமண நாள் விழாவில் பங்கேற்க முடியவில்லை எனக்கூறப்பட்டது.

குடும்பத்தில் நடக்கும் முக்கிய விழாவான இதில் கூட கலந்து கொள்ளாமல், நடிகை சமந்தா தன்னுடைய மாமனார், மாமியாரை தலைகுனிய வைத்து விட்டதாக  பலர் சமந்தாவை விமர்சித்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. திருமணமான நடிகைகள் பற்றிய கருத்துக்கு சமந்தா எதிர்ப்பு
சமந்தா திருமணத்துக்கு பிறகு அதிக படங்களில் நடித்து வருகிறார். திரைக்கு வந்த அவரது படங்கள் அனைத்துமே நல்ல வசூல் பார்த்துள்ளன.
2. நடிகைகளுக்குள் போட்டி உள்ளதா? – சமந்தா
சமந்தா திருமணத்துக்கு பிறகும் ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். கடந்த வருடம் விஜய் ஜோடியாக நடித்த மெர்சல் படம் வந்தது.
3. சவாலான வேடங்களை விரும்பும் சமந்தா
சமந்தா திருமணத்துக்கு பிறகும் சுறுசுறுப்பாக நடிக்கிறார். அவரது நடிப்பில் இரும்புத்திரை, நடிகையர் திலகம், தெலுங்கில் ரங்கஸ்தலம் படங்கள் வந்து வரவேற்பை பெற்றன.