சினிமா செய்திகள்

பேய் படங்களில் அஞ்சலி + "||" + Tribute to ghost films

பேய் படங்களில் அஞ்சலி

பேய் படங்களில் அஞ்சலி
நடிகை அஞ்சலி பேய் படங்களில் நடிக்கிறார்.
அஞ்சலி 4 வருடங்களுக்கு முன்பு ‘கீதாஞ்சலி’ என்ற தெலுங்கு பேய் படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளியது. அஞ்சலி நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. அதன்பிறகு அவர் நடித்து வெளிவந்த படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. மார்க்கெட்டும் குறைந்தது.

இப்போது அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கோனா வெங்கட் அறிவித்து உள்ளார். இதில் நடிக்க அஞ்சலியும் ஆர்வமாக இருக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்குகின்றனர். படத்தின் முதல் தோற்றத்தை பிரபுதேவா வெளியிட்டுள்ளார்.

தமிழில் தயாராகும் ஒ என்ற திகில் படத்துக்கும் அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை பிரவீன் பிக்காட் இயக்குகிறார். இதுவும் பேய் படம்தான் என்று பேசுகின்றனர். இதன் போஸ்டரை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.