சினிமா செய்திகள்

விஜய் பிறந்தநாளில், படத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது + "||" + Vijay's birthday, the name of the film is announced

விஜய் பிறந்தநாளில், படத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது

விஜய் பிறந்தநாளில், படத்தின் பெயர் அறிவிக்கப்படுகிறது
விஜய் பிறந்தநாளையொட்டி அவருடைய படத்தின் பெயரை அறிவிக்க இருக்கிறார்கள்.
‘மெர்சல்’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில், விஜய் நடித்து வருகிறார். இது, அவர் நடிக்கும் 62-வது படம். விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ஏற்கனவே ‘துப்பாக்கி,’ ‘கத்தி’ ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்றாவது முறையாக இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். ராதாரவி, பழ கருப்பையா ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பெயர் வைக்காமலே பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்டனர். 2 மாதங்களாக படத்துக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. தற்போது படத்துக்கு பொருத்தமான பெயரை விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் தேர்வு செய்து விட்டனர். அதை வெளியே சொல்லாமல், இருவரும் ரகசியமாக வைத்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இரண்டு பேரும் இணைந்து பணிபுரிந்த படங்களுக்கு, ‘துப்பாக்கி,’ ‘கத்தி’ என்று ஆயுதங்களின் பெயர்களை வைத்திருந்தனர். எனவே புதிய படத்துக்கும் அதே போன்ற ஆயுதங்களின் பெயர்கள்தான் சூட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு வருகிற 22-ந் தேதி பிறந்தநாள். இதையொட்டி அவருடைய 62-வது படத்தின் பெயரை நாளை (வியாழக்கிழமை) அறிவிக்க இருக்கிறார்கள். அரசியல் கலந்த அதிரடி படமாக, இந்த படம் தயாராகி இருக்கிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.