சினிமா செய்திகள்

“விருந்து நிகழ்ச்சிகளில், நான் கலந்து கொள்வதில்லை” -அனுஷ்கா + "||" + Dinner,I do not attend - Anushka

“விருந்து நிகழ்ச்சிகளில், நான் கலந்து கொள்வதில்லை” -அனுஷ்கா

“விருந்து நிகழ்ச்சிகளில், நான் கலந்து கொள்வதில்லை” -அனுஷ்கா
விருந்து நிகழ்ச்சிகளுக்கு நான் போவதில்லை என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
அனுஷ்கா திரையுலகுக்கு வந்து 12 வருடங்கள் ஆகின்றன. அவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவருக்கு இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒரு வருத்தம். ‘பாகுமதி’ படத்துக்குப்பின், அவர் கைவசம் படங்கள் இல்லை. அதனால் அவர் திருமணத்துக்கு தயாராகி விட்டதாக பேச்சு அடிபடுகிறது.

முன்னதாக அவர் கோவில் கோவிலாக சென்று நல்ல மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று விசேஷ பூஜை மற்றும் வழிபாடுகளை நடத்தி வருகிறார். அனுஷ்கா, தெலுங்கு நடிகர் பிரபாசை திருமணம் செய்து கொள்ளப்போவதாக பேசப்பட்டது. அது, உண்மையல்ல என்று பிரபாஸ் மறுக்கிறார். அனுஷ்கா தரப்பில், ஆமாம் என்று சொல்லவுமில்லை. மறுக்கவும் இல்லை.

இந்த நிலையில், அனுஷ்கா தனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் சில விஷயங்கள் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-

“சினிமா மட்டுமே எனது வாழ்க்கை இல்லை. அதற்கு மேல் இன்னொரு சொந்த வாழ்க்கையும் இருக்கிறது. உறவினர்களுடன் இருக்கத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘பாகுமதி’ படத்துக்குப்பின், கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. அதை உறவினர்களுடன் செலவிடுகிறேன். எதிர்கால வாழ்க்கையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள். அது எனக்கு பிடிக்காது.

இன்றைக்கு சந்தோஷமாக வாழ வேண்டும். அதுதான் முக்கியம். எதிர்காலத்தை பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால், இப்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. எதிர்காலத்தில் நான் என்னவாக இருக்கப் போகிறேன் என்பதை விட, இப்போது எப்படி இருக்கிறேன் என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்.

‘பார்ட்டி, டின்னர்’ போன்ற விருந்து நிகழ்ச்சிகளுக்கு நான் போவதில்லை. அதற்காக யார் என்ன கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.

திட்டமிடல், நல்ல பழக்கமாக இருக்கலாம். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இன்றைய வாழ்க்கை பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் என்னிடம் கிடையாது. டைரக்டர்களுக்கு என் திறமை தெரியும். அதற்கேற்ற கதைகளை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அனுஷ்காவினால் நடிக்க முடியும் என்று டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் நம்பி வருகிறார்கள். அந்த நம்பிக்கையை நான் பூர்த்தி செய்வேன்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.