சினிமா செய்திகள்

சுருதிஹாசன் காதலரை பிரிந்ததாக வதந்தி + "||" + shruti hassan rumor was separated from the lover

சுருதிஹாசன் காதலரை பிரிந்ததாக வதந்தி

சுருதிஹாசன் காதலரை பிரிந்ததாக வதந்தி
நடிகை சுருதிஹாசனுக்கும், இத்தாலியை சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்ற நடிகருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகை சுருதிஹாசனுக்கும், இத்தாலியை சேர்ந்த மைக்கேல் கோர்சல் என்ற நடிகருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மைக்கேல் கோர்சல், லண்டனில் வசித்து வருகிறார். அவரை, சுருதிஹாசன் லண்டனில்தான் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாகி, கல்யாணத்தில் முடிகிற அளவுக்கு நெருக்கமானது.

மைக்கேல் கோர்சலை, சுருதிஹாசன் சென்னைக்கு அழைத்து வந்தார். அவரை, தனது தந்தை கமல்ஹாசனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். மும்பைக்கு அழைத்து சென்று தாயார் சரிகாவிடமும், மைக்கேலை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில், சுருதிஹாசனுக்கும், மைக்கேல் கோர்சலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அது வதந்திதான்...உண்மை இல்லை என்பது போல், சுருதிஹாசனும், மைக்கேலும் மும்பையில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வருவது போல் படங்கள் வெளியாகி உள்ளன.

சுருதிஹாசனுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் புதிய பட வாய்ப்புகள் வந்திருப்பதாகவும், அதனால் அவருடைய திருமணம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.