சினிமா செய்திகள்

திருமணம் எப்போது? -நடிகர் அதர்வா + "||" + When is the wedding -Adir Atharva

திருமணம் எப்போது? -நடிகர் அதர்வா

திருமணம் எப்போது? -நடிகர் அதர்வா
திருமணம் எப்போது? -நடிகர் அதர்வா
நடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் செம போத ஆகாதே. மிஸ்டி கதாநாயகியாக வருகிறார். மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். செம போத ஆகாதே படக்குழுவினர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அதர்வா கூறியதாவது:-

“எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை. படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு மற்றவர்களுக்கு உதவ கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. அதற்காக வருத்தப்படவில்லை. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள்தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.”

இவ்வாறு அதர்வா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...