சினிமா செய்திகள்

கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக சாயிஷா + "||" + In KV Anand's new film sayesha with Surya

கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் சூர்யா ஜோடியாக சாயிஷா

கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில்
சூர்யா ஜோடியாக சாயிஷா
கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நடிகர் சூர்யா தற்போது ‘என்.ஜி.கே.’ எனும் படத்தில் நடித்து வருகிறார். போராளி சேகுவாரா வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவாகி வரும் இப்படத்தை செல்வராகவன் டைரக்டு செய்கிறார். படத்தில் சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, ரகுல் பிரீத்சிங் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

‘என்.ஜி.கே.’ படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் கதாநாயகி மற்றும் இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வந்தது.

இந்தநிலையில் சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியான வனமகன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன. அதனைத்தொடர்ந்து தற்போது சூர்யா ஜோடியாக நடிக்க சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார். 


தொடர்புடைய செய்திகள்

1. சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்
செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.
2. கே.வி.ஆனந்தின் கனவு படம்!
சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்டு செய்து வரும் படம் `என்.ஜி.கே.'.
3. சாயிஷா கொடுத்த மது விருந்து!
‘வனமகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சாயிஷா. இவருடைய சொந்த ஊர், மும்பை. அதனால், ஜாலியாக-சரளமாக பேசி பழகும் சுபாவம் கொண்டவர்.
4. வெங்கட் பிரபுவின்‘பார்ட்டி’ படத்துக்காக சூர்யா–கார்த்தி, சொந்த குரலில் பாடினார்கள்
‘பார்ட்டி’ படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.