சினிமா செய்திகள்

டி.வி. நிகழ்ச்சியில்தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் + "||" + TV Show Tamil actress kissing with lip

டி.வி. நிகழ்ச்சியில்தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்

டி.வி. நிகழ்ச்சியில்தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்
டி.வி. நிகழ்ச்சியில் தமிழ் நடிகைகள் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தனியார் டி.வி. சார்பில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒரே வீட்டில் 16 பிரபலங்கள் இடையே நடக்கும் நிகழ்வுகளை கூறும் தொடர் நிகழ்ச்சியாக, இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் ஆட்டம் போடுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடும் விமர்சனங்களை பெற்றது.

அன்றைய நிகழ்ச்சியின்போது ஒவ்வொரு பாட்டு ஒலிக்கும்போதும், ஒரு ஜோடி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பது போட்டியின் விதி. அந்தவகையில் நேற்று ‘ரெமோ’ பட பாடல் ஒலிக்கும்போது ஜனனி அய்யர் ஆண் வேடத்தில் வந்தார்.

அப்போது அங்கு இருந்த ஐஸ்வர்யா தத்தா, ஜனனி அய்யரிடம் முத்தம் கேட்டு அடம்பிடித்தார். ஜனனி அய்யர் கன்னத்தில் முத்தம் கொடுக்க சென்றபோது, ‘உதட்டில் கொடு’ என்று உதட்டை காட்டி ஐஸ்வர்யா ரசிகர்களை சூடேற்றினார்.

தயக்கத்துடன் ஜனனி அய்யர் அவர் அருகே சென்றபோது, ஐஸ்வர்யா அவரது முகத்தை இழுத்து உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்தார். இதை சக நடிகர்-நடிகைகளும் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தனர்.

இந்த முத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகைகளின் முத்த காட்சி பல விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது. ஜனனி அய்யர் ‘அவன் இவன்’ படத்திலும், ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்திலும் கதாநாயகிகளாக நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.