சினிமா செய்திகள்

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா? நடிகர் ராணா விளக்கம் + "||" + I am kidney Alternative surgery Actor Rana Legend

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா? நடிகர் ராணா விளக்கம்

எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையா? நடிகர் ராணா விளக்கம்
தமிழ், தெலுங்கில் வந்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா. அஜித்குமாரின் ஆரம்பம் படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.
ஆர்யாவுடன் பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரையும் நடிகை திரிஷாவையும் இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள்.


ராணா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்படுவதாக தகவல்கள் பரவின. சிங்கப்பூரில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது. ராணாவுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் அவரது தாயார் தனது சிறுநீரகத்தை ராணாவுக்கு தானம் செய்ய முன்வந்துள்ளதாகவும் தெலுங்கு பட உலகில் பேசப்பட்டது.

ராணாவின் தம்பி அபிராம் பட வாய்ப்பு தருவதாக ஆசை காட்டி படுக்கையில் தன்னை பயன்படுத்தியதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டியும் ராணாவின் நிலைமை பற்றி வருத்தம் தெரிவித்தார். “ராணாவின் உடல்நிலை பிரச்சினை குறித்து தெரிந்து கவலையாக இருக்கிறது. அது சிறிய பிரச்சினையாக இருக்கும் என்று நம்புகிறேன். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தனது உடல் நிலை குறித்து விளக்கம் அளித்துள்ள ராணா, “எனது உடல் நிலை குறித்து வதந்தி பரவி உள்ளது. எனக்கு சிறுநீரக பிரச்சினை இல்லை. ரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளதால் கண் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலைமை உள்ளது. நான் நலமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.