கார்த்தி நடித்துள்ள படத்தை “விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” பட விழாவில் சூர்யா பேச்சு


கார்த்தி நடித்துள்ள படத்தை “விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்” பட விழாவில் சூர்யா பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2018 11:14 PM GMT (Updated: 24 Jun 2018 11:14 PM GMT)

நடிகர் சூர்யா ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் கார்த்தி கதாநாயகனாகவும், சாயிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் கார்த்தி கதாநாயகனாகவும், சாயிஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யராஜ், பானுப்பிரியா, பிரியா பவானி சங்கர், சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கில் ‘சின்ன பாபு’ என்ற பெயரில் வெளியாகிறது.

தெலுங்கு பதிப்பின் பாடல் வெளியீட்டு விழா விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியதாவது:-

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பழமொழி உண்டு. கார்த்தியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். தம்பி கார்த்தியின் வளர்ச்சியும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவமும் எனக்கு பெருமை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வந்த அனைத்து படங்களும் என்னை ஆச்சரியப்படுத்தின.

வாழ்க்கையில் பணம், பதவி, புகழ் எல்லோருக்கும் வரலாம். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் குடும்ப உறவுகள் முக்கியம். அதைத்தான் இந்த படம் சொல்கிறது. விவசாயிகளின் சிறப்பையும் பேசுகிறது. இந்த படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.” இவ்வாறு சூர்யா பேசினார்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “விவசாயிகளை பெருமைப்படுத்தும் படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். இந்த படத்தில் நான் விவசாயியாக நடித்து இருக்கிறேன். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. அதோடு உறவுகளின் முக்கியத்துவத்தையும் படத்தில் காட்சிபடுத்தி உள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படமாக தயாராகி உள்ளது” என்றார்.

Next Story