சினிமா செய்திகள்

13-வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய ஹீரோ + "||" + Race 3 day 7 box office collection: Salman Khan's film

13-வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய ஹீரோ

13-வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய ஹீரோ
சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. #SalmanKhan #Race3
மும்பை

சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' கடந்த 15 ந்தேதி வெளியாகியது. முதல் நாள் இந்த படம் ரூ.29.17 கோடி வசூலானது. 
சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள 'ரேஸ் 3' திரைப்படம் முதல்  6 நாட்களில்  ரூ.142.01  கோடி வசூல் செய்து உள்ளது. ரூபாய் 150 கோடியை கடக்க முடியவில்லை.7 வது நாள் 150 கோடியை எட்டும் என கூறப்படுகிறது. அனைத்து காலங்களிலும் பன்னிரண்டாவது மிக உயர்ந்த முதல் வார வசூலாகும். 

சல்மான் கான் நடிப்பில் உருவாகிய 'ரேஸ் 3' ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டது. ரெமோ டிசோஸா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 150கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல்  வசூல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சல்மான் கான் 13 வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய நடிகர் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திரளான நடிகைகள் பங்கேற்பு
மும்தாஜ் ஆர்மி ஏற்பாடு செய்துள்ள ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகை மும்தாஜ் உள்பட ஏராளமான நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். #MumtazArmy
2. விருது வழங்கும் விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ஸ்ரேயா
விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த உடை ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
3. 500-க்கும் அதிகமான படங்களில் நடித்த பிரபல வில்லன் நடிகர் மரணம்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல மலையாள திரைப்பட நடிகர் கேப்டன் ராஜு காலமானார். அவருக்கு வயது 68.
4. திருமண விழாவில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கொண்ட நடிகர் விஜய்
திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கியதால் காயத்துடன் வீடு திரும்பினார்.
5. பிரபல கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி
பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறி உள்ளார். #sriReddy