சினிமா செய்திகள்

நடிகர் விஜயின் சர்கார் படத்தில் அதிரடி வில்லியாக நடிகை வரலட்சுமி? + "||" + Actor Vijay In the movie Sarkar Actress actress Vallalakshmi?

நடிகர் விஜயின் சர்கார் படத்தில் அதிரடி வில்லியாக நடிகை வரலட்சுமி?

நடிகர் விஜயின் சர்கார் படத்தில் அதிரடி வில்லியாக நடிகை வரலட்சுமி?
நடிகர் விஜயின் சர்கார் படத்தில் நடிகை வரலட்சுமி அதிரடி வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்
சென்னை 

சர்கார் திரைப்படம் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 

விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.

 சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விஜய் அதில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்த விஷயம் ரசிகர்களுக்கு சிறிது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் சர்காரை கொண்டாடவே செய்தனர் விஜய் ரசிகர்கள்.

சர்கார் திரைப்படத்தில் சரத்குமர் மகள் வரலட்சுமியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பதால், வரலட்சுமி இன்னொரு கதாநாயகியா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்து வந்தது. தற்போது சர்காரில் வரலட்சுமியின் கதாபாத்திரம் குறித்து வெளியாகி இருக்கும் ஒரு செய்தி, அந்த சந்தேகங்களுக்கு விடை அளித்திருக்கிறது.

இந்த படத்தில் வரலட்சுமி ஒரு அரசியல்வாதியின் மகளாக நடித்திருக்கிறாராம். அதும் வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறாராம். இதனால் வரலட்சுமி ஒரு திமிரான ரோலில் நடித்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரோலில் அவர் வில்லியாக இருக்கலாம் என்றும் கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம். இந்த தகவல் மட்டும் உண்மையாக இருந்தால், படையப்பா நீலாம்பரிக்கு பிறகு, மக்கள் மனதில் பதியப்போகும் அதிரடி வில்லி, வரலட்சுமி தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த செய்தி எந்த அளவு உண்மை என்பது, அதிகாரப்பூர்வமான தகவல் வந்தால் தான் தெரியும்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்
சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
2. பாராளுமன்ற தேர்தல் 2019 : சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் வைத்த டிமாண்ட்
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் முக்கிய டிமாண்ட் வைத்து உள்ளனர். சிலர் அதனை மறுத்தும் உள்ளனர்.
3. மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்; கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது - கமல்ஹாசன்
மெகா கூட்டணி என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். கட்சிகள் தாங்களே சொல்லிக்கொள்ள கூடாது என கமல்ஹாசன் கூறினார்.
4. அனுமதி இன்றி புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனம் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிம் கர்தாஷியன் வழக்கு
தனது புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்தின் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
5. இந்தியப் படங்களில் அதிகம் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்
இந்தியப் படங்களில் மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவால் தடை செய்யப்பட்ட படங்களில் தமிழ்ப் படங்களுக்கு 2-வது இடம்.

ஆசிரியரின் தேர்வுகள்...