சினிமா செய்திகள்

‘‘விஸ்வரூபம்-2’ பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும்’’ + "||" + 'Viswaroopam -2' Songs Next week will be released

‘‘விஸ்வரூபம்-2’ பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும்’’

‘‘விஸ்வரூபம்-2’  பாடல்கள்  அடுத்த  வாரம்  வெளியாகும்’’
கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் முடிந்து திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் இதன் டிரெய்லரை வெளியிட்டனர்.
‘‘விஸ்வரூபம்-2’ தமிழ் டிரெய்லரை சுருதிஹாசனும் தெலுங்கு டிரெய்லரை ஜூனியர் என்.டி.ஆரும் இந்தியில் அமீர்கானும் வெளியிட்டார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது.

அதுபோல் விமர்சனங்களும் கிளம்பின. ஆகஸ்டு 10–ந் தேதி விஸ்வரூபம்-2 படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். உலகம் முழுவதும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிக திரையரங்குகளில் விஸ்வரூபம்-2 வெளியாகும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில் விஸ்வரூபம்-2 படத்தின் பாடல்கள் அடுத்தவாரம் வெளியாகும் என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.


அவர் டெலிவி‌ஷனில் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடல்களை வெளியிடுகின்றனர்.  விஸ்வரூபம் படம் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் கடந்த 2013–ல் வெளியானது. முதல் பாகம் தயாரானபோதே இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

இரண்டாம் பாகம் படத்தை கமல்ஹாசனே டைரக்டு செய்துள்ளார். பூஜாகுமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் வந்தால் அரசியல்வாதியாக எதிர்கொள்ள தயார் என்று கமல்ஹாசன் ஏற்கனவே கூறி உள்ளார். கர்நாடகாவில் கமல்ஹாசன் படங்களை திரையிட விடமாட்டோம் என்று கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளதால் விஸ்வரூபம்-2 அந்த மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த படம் திரைக்கு வந்த பிறகு சபாஷ்நாயுடு, இந்தியன்–2 பட வேலைகளை தொடங்க திட்டமிட்டு உள்ளார். சபாஷ் நாயுடு படத்தின் சில காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன்- கமல்ஹாசன்
சென்னை விமான நிலையத்தில் பேசிய கமல்ஹாசன், ரஜினியின் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
2. நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கமல்ஹாசன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நலனில் அக்கறை உள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
3. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
4. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், இன்று திருவாரூரில் பொதுக்கூட்டம் கமல்ஹாசன் பங்கேற்பு
திருவாரூரில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
5. விரக்தியின் உச்சகட்டத்தில் புலம்புகிறார்: தி.மு.க.வை தாக்கி பேசிய கமல்ஹாசனுக்கு முரசொலியில் பதிலடி
முதலமைச்சர் கனவில் கட்சி தொடங்கி, அதை கொள்வாரில்லை என்ற விரக்தியில் தலைமுடியையும், சட்டையையும் கிழித்துக் கொண்டு அலையும் நிலைக்கு கமல்ஹாசன் செல்லப் போகிறாரோ என அஞ்ச வேண்டியிருப்பதாக, முரசொலி கட்டுரையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...