சினிமா செய்திகள்

நடிகை மாதுரி தீட்சித்துக்கு எம்.பி. பதவி? + "||" + Actress Madhuri Dixit to be nominated for MP?

நடிகை மாதுரி தீட்சித்துக்கு எம்.பி. பதவி?

நடிகை மாதுரி தீட்சித்துக்கு எம்.பி. பதவி?
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18–ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10 வரை நடக்கிறது. இந்த கூட்டத் தொடருக்கு முன்பாக காலியாக உள்ள 4 நியமன எம்.பி பதவிகளை நிரப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.
பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித்தை நியமன எம்.பி. யாக நியமிப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக மாதுரி தீட்சித்தை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நியமன எம்.பி. யாக இருந்த நடிகை ரேகாவின் பதவி காலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது. மாதுரி தீட்சித் 1980 மற்றும் 90–களில் இந்தி பட உலகில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்ந்தார். நடனத்திலும் திறமை காட்டினார்.


தேஜாப், கல்நாயக், சாஜன், பேட்டா, ஆப்கே ஹைன் கவுன், தேவதாஸ் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்தியாவின் பிரபல ஓவியரான எம்.எப். ஹுஷேன் மாதிரி தீட்சித்தின் நடிப்பை பாராட்டி அவரை வைத்து கஜகாமினி என்ற படத்தையும் தயாரித்தார். மத்திய அரசு மாதுரி தீட்சித்துக்கு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. 


தொடர்புடைய செய்திகள்

1. நடனம்: கல்வியும் செல்வமும் தரும்
இந்திய திரை உலகில் கொடிகட்டி பறந்த நடிகை மாதுரி தீட்சித் இப்போது நாட்டியத் துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். நடனத்தையே தனது முழுநேர சேவையாக்கிக் கொண்டுள்ளார்.