சினிமா செய்திகள்

நடிகர் சங்கத்தில் இருந்து 3 பிரபல நடிகைகள் வெளியேறினர் + "||" + Victim actress, Rima, Remya Nambeesan, Geetu Mohandas quit AMMA

நடிகர் சங்கத்தில் இருந்து 3 பிரபல நடிகைகள் வெளியேறினர்

நடிகர் சங்கத்தில் இருந்து 3 பிரபல நடிகைகள் வெளியேறினர்
மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நடிகைகள் ரிமா கல்லிங்கல் , ரம்யா நம்பீசன், கீதா மோகன்தாஸ் ஆகியோர் வெளியேறினர்.
திருவனந்தபுரம்

கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக   நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த  இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக  சேர்க்கப்பட்டு உள்ளார்.

திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார்.  இதை தொடர்ந்து  நான்கு நடிகைகள்  சங்கத்தில் இருந்து வெளியேறினர்.

கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நாளை மறுநாள் சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
நாளை மறுநாள் சபரிமலை நடை திறக்கபடுவதால் அங்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
2. கேரளாவில் 29-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க திட்டம்
கேரளாவில் 29 ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை இயக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது
3. புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் ராணுவ வீரர்கள்
கேரளாவில் புயலால் விழுந்து கிடக்கும் மரங்களை கொண்டு பாலங்கள் அமைத்து மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். #KeralaFlood2018
4. கேரள காதி பேஷன் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வந்த ஹனான் ஹமீத்
கல்லூரி உடையில் மீன் விற்பனை செய்த மாணவி ஹனான் ஹமீத்க்கு கேரளாவே துணை நிற்கும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
5. 5 வயது மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்த தந்தையின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து
கேரளாவில் 5 வயது மகளை தந்தை ஒருவர் ஸ்கூட்டர் ஓட்ட வைத்ததால், அவரின் டிரைவிங் லைசென்சை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.