சினிமா செய்திகள்

ரெயில் பயணத்தில் நடிகை மெஹ்ரீன் அவதி + "||" + Actress Mehreen suffers from train ride

ரெயில் பயணத்தில் நடிகை மெஹ்ரீன் அவதி

ரெயில் பயணத்தில் நடிகை மெஹ்ரீன் அவதி
நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா, ஹன்சிகா, சமந்தா என்று முன்னணி நடிகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதால் சென்னை, ஐதராபாத், மும்பை என்று படப்பிடிப்புகளுக்காக விமானத்திலேயே பறந்தபடி இருக்கிறார்கள்.
கேரளாவில் நடிகையை காரில் கடத்திய சம்பவத்துக்கு பிறகு கதாநாயகிகளுக்கான பாதுகாப்பில் அக்கறை எடுக்கும்படி நடிகர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் நடிகை மெஹ்ரீன் ரெயில் பயணத்தில் குடிபோதையில் இருந்த ஒருவரால் அவதிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.


மெஹ்ரீன் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது தமிழில் தயாராகும் நோட்டா படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார்.

நோட்டா படத்தில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் இருந்து மெஹ்ரீன் சென்னை புறப்பட்டார். ஆனால் அவருக்கு விமானம் கிடைக்கவில்லை. இதனால் ரெயிலில் பயணமானார். அப்போது அவரது இருக்கையை வேறு ஒருவர் ஆக்கிரமித்து உட்கார்ந்து இருந்தார். அவர் மது அருந்தி போதையில் இருந்ததால் மெஹ்ரீனுக்கு பயம் ஏற்பட்டது.

நீண்டநேரம் ரெயிலில் நின்று கொண்டே பயணித்தார். பின்னர் தனது இயக்குனருக்கு போன் செய்து நிலைமையை விளக்கினார். அந்த இயக்குனர் காருடன் ரசிகர்களையும் அனுப்பி வைத்தார். அந்த ரசிகர்கள் மெஹ்ரீனை காரில் ஏற்றி சென்னை வரை வந்து பத்திரமாக இறக்கி விட்டு சென்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...