சினிமா செய்திகள்

ஷாருக்கானின் 26 வருட சினிமா வாழ்க்கை + "||" + Shahrukh Khan's 26th cinema career

ஷாருக்கானின் 26 வருட சினிமா வாழ்க்கை

ஷாருக்கானின் 26 வருட சினிமா வாழ்க்கை
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஷாருக்கான் 1980–களில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி 1992–ல் தீவானா என்ற இந்தி படத்தில் அறிமுகமானார்.
தில்வாலே துல் கனியா ஜாயேங்கே, சக்தே இந்தியா, குச் குச் ஹோத்தாஹை என்று ஷாருக்கான் நடித்த பல படங்கள் இந்தி பட உலகில் புதிய சாதனைகள நிகழ்த்தியது.

தயாரிப்பாளர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணி உரிமையாளர் என்று பல துறைகளில் திறமை காட்டி வரும் ஷாருக்கான் நடிக்க வந்து 26 வருடங்கள் ஆகிவிட்டன.

இதற்காக அவருக்கு சமூக வலைத்தளங்களில் நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். சினிமா வாழ்க்கை குறித்து ஷாருக்கான் கூறியதாவது:–

நான் சினிமாவில் நடிக்க வந்து 26 ஆண்டுகள் நிறைவடைந்து இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 26 வருடங்களாக எனக்குள் இன்னொரு நடிகரை வெளிப்படுத்தி வந்து இருக்கிறேன்.

எனது வயதில் பாதி சினிமாவில்தான் கழிந்து இருக்கிறது. இதன் மூலம் அன்பு, சந்தோ‌ஷம், சோகம், கோபம் என்று அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். இத்தனை ஆண்டு காலம் ரசிகர்கள் என்னை தங்கள் இதயத்தில் வைத்து இருந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல வருடங்கள் அவர்கள் மனதில் குடியிருந்து முத்திரை பதிக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பமாக இருக்கிறது.

இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஷாருக்கான் முகத்தில் மை தெளிக்கும் போராட்டம் வாபஸ்
ஷாருக்கான் 2001–ல் நடித்து திரைக்கு வந்த ‘அசோகா’ படத்தை எதிர்த்து ஒடிசாவில் அப்போது போராட்டங்கள் நடந்தன.
2. “ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம்” - ஒடிசா அமைப்பு மிரட்டல்
ஷாருக்கான் முகத்தில் மை அடிப்போம் என ஒடிசா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.