சினிமா செய்திகள்

எனக்கு ரகசிய திருமணமா? –காஜல் அகர்வால் + "||" + Can i have a secret wedding? -Kajal Agarwal

எனக்கு ரகசிய திருமணமா? –காஜல் அகர்வால்

எனக்கு ரகசிய திருமணமா? –காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடிகையாகி 14 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து 50 படங்களை தாண்டி விட்டார்.
காஜல் அகர்வாலுக்கு இப்போதும்  பட வாய்ப்புகள் குவிகிறது. சமீபத்தில் 34–வது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினிகாந்தின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பேச்சு நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வாலுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது. காஜல் அகர்வால் பற்றியும் கிசுகிசுக்கள் வருகின்றன. தெலுங்கு தயாரிப்பாளருடன் காதல், ரகசிய திருமணம் செய்துகொண்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. இதற்கு பதில் அளித்து காஜல் அகர்வால் கூறியதாவது:–

‘‘என்னை பற்றி தொடர்ந்து வதந்திகள் வருகின்றன. எனக்கு திருமணம் நடந்து விட்டது என்றும் தவறான தகவலை பரப்புகிறார்கள். நான் ரகசிய திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. என்னை பெரிய நடிகையாக எப்போதும் நினைத்தது இல்லை. சாதாரண பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்.

சினிமா உலகம் எனது உண்மையான குணத்தை மாற்றி விடவில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வீட்டில் தங்கை மற்றும் உறவினர்களுடன் நேரத்தை கழிக்கிறேன். வீட்டில் அடியெடுத்து வைத்தாலே குழந்தை போல் மாறி விடுகிறேன்.

சிறுவயது கலாட்டாக்கள் இப்போதும் எனக்குள் இருக்கிறது. சினிமாவில் நடிக்கும்போது மட்டும் சீரியஸ் ஆகிவிடுகிறேன். இந்த உயரத்துக்கு நான் வருவதற்கு ரசிகர்கள்தான் காரணம். எனவே அவர்களுக்காக சினிமாவில் சிறப்பாக நடிக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது’’.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘மம்முட்டி–மோகன்லால் இருவரையும் பிடிக்கும்’’ – காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் தமிழிலும், தெலுங்கிலும் தலா 4 படங்கள் திரைக்கு வந்தன.
2. ‘அனிருத்’தில், காஜல் அகர்வால்
ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரம்மோற்சவம்’ என்ற தெலுங்கு படத்தை ‘அனிருத்’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள்.
3. “பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை” -காஜல் அகர்வால்
பிரபல கதாநாயகர்களுடன் எனக்கு நட்பு இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
4. ‘‘இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர தயார்’’ – காஜல் அகர்வால்
காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் தமிழ், தெலுங்கில் 4 படங்கள் வந்தன. அவற்றில் இரண்டு படங்கள் விஜய், அஜித்குமாருடன் நடித்தவை.
5. வாரிசு நடிகர்கள் பிடியில் சினிமா உலகமா?-காஜல் அகர்வால்
சினிமாவில் வாரிசு நடிகர்-நடிகைகள் ஆதிக்கம் இருக்கிறது என்றும் தாய் தந்தை யாரேனும் ஒருவர் நடிகராகவோ இயக்குனராகவோ இருந்தால்தான் நிலைக்க முடியும் என்றும் அப்படி இல்லாதவர்களை ஒதுக்கி விடுவார்கள் என்றும் பேச்சு பரவி கிடக்கிறது.