நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு; மோகன்லாலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு


நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு;  மோகன்லாலுக்கு அதிகரிக்கும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 28 Jun 2018 6:40 AM GMT (Updated: 28 Jun 2018 6:40 AM GMT)

நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு நடிகர் சங்க தலைவர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. #ManjuWarrier #Mohanlal #Dileep

திருவனந்தபுரம்

கேரள மாநில மலையாள நடிகர்கள் சங்க அம்மாவின் தலைவராக   நடிகரும், எம்.பி.யுமான இன்னசென்ட் இருந்து வந்தார். 17 ஆண்டுகளுக்கும் மேலாக சங்கத்தின் தலைவராக இருந்த  இன்னசென்ட் உடல் நலக்குறைவு காரணமாக பதவியிலிருந்து விலகினார். 

இதையடுத்து மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க தலைவராக நடிகர் மோகன்லால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நடிகை ஒருவர் கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதால், நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் திலீப் சங்க உறுப்பினராக  சேர்க்கப்பட்டு உள்ளார்.

திலீப் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  இது குறித்து நடிகை ரீமா கல்லிங்கல் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தார். நடிகர் சங்கம் உணர்சியற்றதாக இருப்பதாக கூறினார்.  இதை தொடர்ந்து  நான்கு நடிகைகள்  சங்கத்தில் இருந்து வெளியேறினர்.  நடிகைகள் பாவனா, ரீமா கல்லிங்கல், கீது மோகன் தாஸ், ரம்யா நம்பீசன்,ஆகியோர் மலையாள நடிகர் சங்கம்  அம்மாவை விட்டு வெளியேறினர்.

கேரளாவில் சினிமாவில் பெண்கள் கூட்டாளி என்ற அமைப்பு சில நடிகைகளால் நடத்தபட்டு வருகிறது. அதில் அவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த அமைப்பு அதிராக பூர்வ பேஸ்புக்கில் இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து கேரள மாநில பெண்கள் மன்ற உறுப்பினர் எம்.சி. ஜோசபின் நடிகைகளின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் கூறி உள்ளதாவது:-

அத்தகைய பலமான முடிவை எடுப்பதற்காக நான்கு பெண்கள் பாராட்டப்பட வேண்டும். மஞ்சு வாரியர்  இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க தயங்க கூடாது. இந்த விஷயத்தில் யாருக்கும் அவர் பயப்படக்கூடாது.

மோகன்லால் போன்ற ஒரு நபரிடம் இருந்து இதை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. சமூக அக்கறையுடன் தொடர்புடையவர் யார்? திலீப் குற்றவாளி எனும் போது, எப்படி இந்த முடிவை எடுக்க முடியும்? மோகன்லால் மட்டுமல்லாமல், இதில் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் வலதுபுறம் ஒட்டிக்கொண்டனர் என கூறி உள்ளார்.

மலையாள நடிகர் சங்கம் அம்மா இந்த விவகாரத்தில் ஊமையாக இருப்பதாக நடிகர் திலகன் சங்கத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதே போல் நடிகை ரஞ்சனியும் இந்த விவகாரத்தில் அம்மா நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Next Story