சினிமா செய்திகள்

பசுமை வழி சாலைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு + "||" + Actor Karthi opposes the green road

பசுமை வழி சாலைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு

பசுமை வழி சாலைக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு
சென்னை–சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகள்  பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விவசாய நிலங்களில் அதிகாரிகள் பசுமை சாலைக்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


இந்த நிலையில் பசுமை வழி சாலை திட்டத்துக்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘சேலம்– சென்னை பசுமை வழி சாலை திட்டம் தேவை இல்லாதது. விவசாய நிலங்களையும் மலைகளையும் அழித்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? விவசாயத்தை மட்டும் நம்பி இருக்கிறவர்களுக்கு இயற்கை விவசாயம் பெரும் சவாலாக இருக்கிறது.’’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ அன்புமணி ராமதாஸ் பேட்டி
‘சென்னை-சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிராக சட்ட ரீதியாக போராடுவோம்’ என்று சேலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
2. பசுமை வழிச் சாலை: நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்-ஆட்சியர் ரோகிணி
பசுமை வழிச் சாலை அமைக்கும் விவகாரம்: "நிலம், மரம் என ஒவ்வொன்றுக்கும் இழப்பீடு வழங்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறினார். #Rohini