சினிமா செய்திகள்

பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார் + "||" + Shocking! Deepika Padukone reveals she was asked to get a boob job

பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்

பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்யாதீர்கள் -தீபிகா படுகோனே சொல்கிறார்
பட வாய்ப்புக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள் என நடிகை தீபிகா படுகோனே கூறி உள்ளார்.
மும்பை

பத்மாவத் படம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு தான் இந்தப் படம் வெளியானது. தீபிகாவுக்கும் இந்தப்படத்தில் நடித்ததற்காக பல்வேறு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. தடைகளை கடந்து இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தீபிகா  தனது  ஆரம்ப காலம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என ஆங்கில பத்திரிகைக்கு ஒன்றுக்கு  அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பெரிய மார்பகங்கள் இருந்தால் தான் பாலிவுட் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் ஈர்க்க முடியும். அதனால் மார்பகங்களை செயற்கையாக பெரிதாக்கிக்கொள்ள சிலர் ஆலோசனைகள் வழங்கினர். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைவதற்கு இது எளிதான வழி என்றனர். ஆனால் நான் அப்படிப்பட்ட நபர் இல்லை, படவாய்ப்புகளுக்காக நான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. ஆரம்ப காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அதில் இருந்து மீண்டுவிட்டேன். இல்லை என்றால் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றிருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனே திருமணம் தள்ளிவைப்பு
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
2. அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் கசிந்துள்ளன
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் வெளியானதால், படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
3. மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
4. நவம்பர் 20–ந் தேதி தீபிகா படுகோனேவுக்கு திருமணம்?
தீபிகா படுகோனே-இந்தி நடிகர் ரன்வீர் சிங் திருமணம் நவம்பர் 20–ந் தேதி நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் நடிகை ஸ்ரீ ரெட்டி ஆவேசம்
அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள் என நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக கூறி உள்ளார். #SriReddy #Varahi