சினிமா செய்திகள்

புதிய படங்களில் ரஜினி, கமலுடன் ஜோடி சேர கதாநாயகிகள் போட்டி + "||" + New films Rajini, with Kamal Join the pair The heroine competition

புதிய படங்களில் ரஜினி, கமலுடன் ஜோடி சேர கதாநாயகிகள் போட்டி

புதிய படங்களில் ரஜினி, கமலுடன் ஜோடி சேர கதாநாயகிகள் போட்டி
ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒருபுறம் அரசியல் பணிகளை தீவிரப்படுத்திக் கொண்டு புதிய பட வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
பீட்சா, ஜிகர்தண்டா படங்கள் எடுத்து பிரபலமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினியும், ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்–2 படத்தில் கமல்ஹாசனும் நடிக்கின்றனர்.

ரஜினிகாந்த் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு டார்ஜிலிங் பகுதியில் நடந்து வருகிறது. இது அதிரடி படமாக தயாராகிறது என்றும், அரசியல் வி‌ஷயங்கள் இருக்காது என்றும் கார்த்திக் சுப்புராஜ் கூறினார். சிவாஜி, எந்திரன், கோச்சடையான் படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்த பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.


ரஜினி பேராசிரியராக நடிக்கிறார் என்றும், இமயமலை பகுதியிலும், இந்திய–பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடப்பதால் பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்றும் பேச்சு உள்ளது. விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.

ரஜினியுடன் ஜோடி சேர கதாநாயகிகள் மத்தியில் போட்டி நிலவுகிறது. முதலில் சிம்ரன் பெயர் அடிபட்டது. ஆனால் படக்குழுவினர் உறுதிசெய்யவில்லை. நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் தூது அனுப்பி இருப்பதாக தகவல்.

இந்தியன்–2 படம் 1996–ல் வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தில் வர்ம கலை மூலம் லஞ்சம் வாங்குபவர்களை அழிக்கும் கமலின் இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. விபத்தில் அந்த தாத்தா கதாபாத்திரம் இறந்து விட்டதாக போலீசார் நம்புவது போன்றும், அவரோ வெளிநாட்டில் கம்பீரமாக நடந்து செல்வது போன்றும் படத்தை முடித்து இருந்தனர்.

எனவே இந்தியன்–2 படத்திலும் அந்த தாத்தா கதாபாத்திரம் இருக்கும் என்கின்றனர். அரசியல் படமாக எடுக்கின்றனர். படப்பிடிப்பை விரைவில் தொடங்க இயக்குனர் ‌ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. நயன்தாராவிடம் பேசி வருவதாகவும் தகவல். மேலும் சில நடிகைகளும் கமல் ஜோடியாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.