சினிமா செய்திகள்

அரசு விழாவாக சிவாஜி கணேசன் பிறந்த நாள் நடிகர் சங்கம் பாராட்டு + "||" + Sivaji Ganesan birthday is the state festival Actors Association Appreciate

அரசு விழாவாக சிவாஜி கணேசன் பிறந்த நாள் நடிகர் சங்கம் பாராட்டு

அரசு விழாவாக சிவாஜி கணேசன் பிறந்த நாள் நடிகர் சங்கம் பாராட்டு
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
‘‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த கலைஞரும் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூ‌ஷண், செவாலியே, தாதாசாகேப் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று கலைத்துறைக்கு பெருமை ஈட்டித்தந்தவருமான நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளான அக்டோபர் 1–ந் தேதி இனி ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.


இந்திய அளவிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களாலும் கொண்டாடப்படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைச்சேவையை பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் சார்பாகவும், ஒட்டுமொத்த தமிழ்த்திரைத்துறையினர் சார்பாகவும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.