சினிமா செய்திகள்

2–வது திருமணம் செய்வதா? நடிகை ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல் + "||" + To marry the 2nd Threatens murder at actress Renu Desai

2–வது திருமணம் செய்வதா? நடிகை ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல்

2–வது திருமணம் செய்வதா? நடிகை ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல்
பிரபுதேவா, பார்த்திபன் இணைந்து நடித்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கதாநாயகியாக வந்தவர் ரேணுதேசாய். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
ரேணுதேசாய்க்கும், தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் சகோதரருமான பவன் கல்யாணுக்கும் படங்களில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்து, 2009–ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ரேணுதேசாய்க்கும், பவன் கல்யாணுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2013–ல் விவாகரத்து செய்து பிரிந்தனர். சமீபத்தில் இன்னொருவருடன் தனக்கு காதல் ஏற்பட்டுள்ளதாக ரேணுதேசாய் அறிவித்தார். ‘‘நான் தவறான இடங்களில் அன்பை தேடினேன். இப்போது உண்மையான காதலரை கண்டுபிடித்து விட்டேன்’’ என்று இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.


ஒரு ஆணுடன் கைகோர்த்து இருப்பதுபோன்ற படத்தையும் வெளியிட்டார். இரண்டு தினங்களுக்கு முன்பு காதலருடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்து நிச்சயதார்த்த படத்தையும் வெளியிட்டார். அதில் காதலர் முகம் பாதிதான் தெரிந்தது. காதலர் யார் என்ற விவரத்தை ரேணுதேசாய் ரகசியமாக வைத்துள்ளார்.

நிச்சயதார்த்த படத்தை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்கள் கோபமுற்று நடிகை ரேணுதேசாய்க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ‘‘பவன் கல்யாண் எங்கள் கடவுள். அவரை காயப்படுத்தாதீர்கள். மீறி காயப்படுத்தினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும். மீண்டும் திருமணம் செய்யாதீர்கள். பல பெண்கள் தனியாக வாழ்கிறார்கள். உங்களுக்கு மட்டும் திருமணம் எதற்கு? என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை மிரட்டல் குறித்து போலீசில் புகார் அளிப்பது குறித்து ரேணுதேசாய் ஆலோசித்து வருகிறார்.