சினிமா செய்திகள்

‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா + "||" + Actresses can achieve even after marriage - Shriya

‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா

‘‘திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் சாதிக்கலாம்’’ –ஸ்ரேயா
நடிகை ஸ்ரேயா, ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே கோசேவை காதலித்து திருமணம் செய்து சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.
நடிகை ஸ்ரேயா இனிமேல் நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தெலுங்கு படமொன்றில் ஒப்பந்தமாகி நடிக்க வந்து இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பது குறித்து ஸ்ரேயா கூறியதாவது:–

‘‘திருமணமான உடனேயே நடிக்க வந்து விட்டீர்களே? என்று என்னை சந்திப்பவர்கள் கேட்கிறார்கள். சினிமாவில் நடிப்பதற்கு திருமணம் தடை இல்லை. இதை ஏற்கனவே சில நடிகைகள் நிரூபித்து உள்ளனர். திருமணமான பிறகும் அவர்கள் கதாநாயகிகளாக தொடர்ந்து நடிக்கிறார்கள்.


முன்பெல்லாம் திருமணமானதும் ஒதுக்கி விடுவார்கள், பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற பேச்சுக்கள் நிலவியது. அந்த நிலைமைகள் இப்போது மாறி இருக்கிறது. திருமணத்துக்கு பிறகும் நடிகைகளால் திரையுலகில் சாதிக்க முடியும். நான் மீண்டும் நடிப்பதை ரசிகர்கள் வரவேற்று உள்ளனர்.

ரசிகர்கள் என்னை விரும்பி பார்ப்பதுவரை நடித்துக்கொண்டே இருப்பேன். எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள்? என்று கேட்கிறார்கள். குழந்தைக்கு இப்போது அவசரம் இல்லை. இன்னும் 20 படங்களில் நடித்த பிறகுதான் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிப்பேன்.’’

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.