சினிமா செய்திகள்

‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி + "||" + Give the work... Let's come when the victory comes - interview Jayam Ravi

‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி

‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி
ஜெயம் ரவி–நிவேதா பெத்துராஜ் நடித்து, நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சவுந்தர்ராஜன் டைரக்டு செய்த ‘டிக் டிக் டிக்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஜெயம் ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

‘‘உன் உழைப்பை கொடு, வெற்றி வரும்போது வரும் என்பதுதான் என் குடும்பம் எனக்கு கற்றுக் கொடுத்த தாரக மந்திரம். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், ரசிகர்கள்தான். நாம் என்ன கொடுத்தாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் வெற்றி. ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து பார்க்க காரணம், டைரக்டர் சக்தி. ‘‘இந்த படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை. ஒரு மகன் இருக்கிறான். உங்க மகன் நடித்தால் நல்லாயிருக்கும்’’ என்றார்.


கதைக்கு தேவை என்றால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று முடிவு செய்தோம். இசையமைப்பாளர் இமானுக்கு இது 100–வது படம். அவர் இவ்வளவு உயரத்துக்கு போனாலும், ரொம்ப தன்னடக்கம் உடையவர்.

எனக்கும், என் மகனுக்கும் மதன் கார்க்கி எழுதிய ‘‘குறும்பா’’ பாடல் காலத்துக்கும் என் நினைவில் நிற்கும். அந்த பாடலை 2 ஆயிரம் முறையாவது பார்த்திருப்பேன். கதையை கேட்ட தயாரிப்பாளர்கள் யாருக்கும் படத்தின் மீது நம்பிக்கை இல்லை. கதையை உணர்ந்து நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் ஜபக்குக்கு நன்றி.

எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது, என் அண்ணன். நான் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதற்கு அவரும் ஒரு காரணமாக இருக்கிறார்.’’