சினிமா செய்திகள்

“முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” -கீர்த்தி சுரேஷ் + "||" + I will not act in the kiss scene - Keerthi Suresh

“முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” -கீர்த்தி சுரேஷ்

“முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” -கீர்த்தி சுரேஷ்
முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
சினிமாவில் முத்தக் காட்சி சாதாரணமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் துணிச்சலாக முத்த காட்சிகளில் நடிகைகள் நடிக்க தொடங்கி உள்ளனர். கீர்த்தி சுரேஷ் இதுவரை அதுமாதிரி நடிக்கவில்லை. முத்தக் காட்சியில் நடிப்பீர்களா? என்று கேட்டபோது கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:-

“நான் படங்களில் நடிக்க தொடங்கியதுமே கமர்சியல் நடிகைகளுக்கு எல்லைகள் இருக்க கூடாது, எந்த கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்க வேண்டும். முத்தக் காட்சிகளில் நடிக்கவும் தயங்க கூடாது என்று கூறினர். ஆனால் என்னிடம் யாராவது முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று அணுகினால் முடியாது என்று மறுத்து விடுவேன். இதுவரை நான் நடித்த எந்த படத்திலும் முத்தக் காட்சி இல்லை. அதுமாதிரி காட்சிகள் இல்லாத படவாய்ப்புகளே எனக்கு வந்துள்ளன. நான் நடித்துள்ள படங்களின் டைரக்டர்கள் யாரும் முத்தக் காட்சியில் நடிக்க நிர்ப்பந்திக்கவில்லை. இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். என்னால் முத்தக் காட்சிகளில் நடிக்க முடியாது.

காரணம் எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. காதல் காட்சிகளில் நடிக்கவும் வெட்கப்படுவேன். கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. தமிழில் நிறைய படங்கள் கைவசம் உள்ளன.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ கீர்த்தி சுரேஷ் விளக்கம்
‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ என்பது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.
2. சோர்ந்து போன கீர்த்தி சுரேஷ்!
சண்டக்கோழி-2 படத்தில் தன்னை விட, வரலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கீர்த்தி சுரேஷ் வருத்தப்படுகிறாராம்.
3. கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து
இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து தயாராக இருக்கிறது.
4. சாவித்திரி படம் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை புகழ்ந்து தள்ளிய ராஜமவுலி
‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த பின்னர் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மானை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டி உள்ளார். #Mahanati #Rajamouli #KeerthySuresh #DulquerSalmaan
5. கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்தது
கீர்த்தி சுரேஷ் சம்பளம் உயர்ந்துள்ளது.