சினிமா செய்திகள்

நடிகர் நானி வக்கீல் நோட்டீசு: ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுப்பு + "||" + Actor Nani lawyer notices: Srireddy refuses to express regret

நடிகர் நானி வக்கீல் நோட்டீசு: ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுப்பு

நடிகர் நானி வக்கீல் நோட்டீசு:
ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுப்பு
நடிகர் நானியிடம் வருத்தம் தெரிவிக்க நடிகை ஸ்ரீரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழில் ‘நான் ஈ’ படத்தில் நடித்து பிரபலமானவர் நானி. வெப்பம், ஆஹா கல்யாணம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் மீது நடிகை ஸ்ரீரெட்டி செக்ஸ் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். “நானி ஒரு பெண் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார். நிறைய பெண்கள் அவரிடம் ஏமாந்துள்ளனர். எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். நானியின் சர்ச்சை படங்களை விரைவில் வெளியிடுவேன். அதை காண தயாராக இருங்கள்” என்று கூறினார்.

நானி சம்பந்தமான ஆபாச வீடியோ ஸ்ரீரெட்டியிடம் இருக்கலாம் என்றும் அதை வைத்தே இந்த மிரட்டலை விடுத்து இருக்கிறார் என்றும் தெலுங்கு பட உலகினர் பேசினர். இந்த குற்றச்சாட்டுகள் நானிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் ஸ்ரீரெட்டிக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார். “என்மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறிய ஸ்ரீரெட்டி ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நோட்டீசில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஒரு வாரம் தாண்டியும் ஸ்ரீரெட்டி வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதனால் அவர் மீது வழக்கு தொடர்வது குறித்து வக்கீல்களுடன் நானி ஆலோசனை நடத்துகிறார். டைரக்டர்கள் சேகர் கம்முலு, தயாரிப்பாளர் கோனா வெங்கட், நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நடிகர் ராஜசேகர் ஆகியோர் மீதும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறியிருந்தார். தற்போது தெலுங்கு பட உலகினர் ஸ்ரீரெட்டிக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகின்றனர். இதனால் தனக்கு பணகஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீரெட்டி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர் - ஸ்ரீரெட்டி புதிய மிரட்டல்
பாலியல் தொல்லை கொடுப்பதாக, நடிகர் ஒருவருக்கு ஸ்ரீரெட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.
2. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி
‘மீ டூ’ பரபரப்புக்கு முன்பே பாலியல் புகார்களால் திரையுலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்து தன்னை ஏமாற்றி விட்டதாக அவர் கூறினார்.
3. ஆபாச வீடியோ உள்ளதாக மிரட்டல் - ஸ்ரீரெட்டியிடம் சிக்கிய இன்னொரு நடிகை
ஆபாச வீடியோ உள்ளதாக, ஸ்ரீரெட்டியிடம் இன்னொரு நடிகை சிக்கிக்கொண்டார்.
4. ‘‘தமிழ் படங்களில் நடிக்க ஆசை’’ –ஸ்ரீரெட்டி
தமிழ் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
5. வீடியோ படத்தை வெளியிட்டார் : சிம்புவை பாராட்டிய ஸ்ரீரெட்டி
சமீபகாலங்களில் ஆந்திராவில் அதிகமாக அதிர்ச்சியூட்டியது யாரென்றால், அது ஸ்ரீரெட்டிதான்.