சினிமா செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகை புற்றுநோயால் பாதிப்பு ; நியூயார்க்கில் சிகிச்சை + "||" + Sonali Bendre reveals she has cancer

பிரபல பாலிவுட் நடிகை புற்றுநோயால் பாதிப்பு ; நியூயார்க்கில் சிகிச்சை

பிரபல பாலிவுட் நடிகை புற்றுநோயால் பாதிப்பு ; நியூயார்க்கில் சிகிச்சை
பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. #SonaliBendre
நியூயார்க்

பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே இவர் ஆக் என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.   பம்பாய், காதலர் தினம்,கண்ணோடு காண்பதெல்லாம்   போன்ற தமிழ்படங்களில் நடித்து உள்ளார். 2004  ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்  நடிக்கவில்லை. அவர் நவம்பர் 12, 2002 இல் திரைப்பட இயக்குனரான கோல்டி பெல்லை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு 13 வயதில்  ஒரு மகன் உள்ளார்.

சமீபத்தில், நடிகை முதல் எபிசோடில் ஒளிபரப்பப்பட்ட பிறகு, ஒரு ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'இந்தியாவின் சிறந்த டிமேர்பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

43 வயதாகும் சோனாலி  தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவர் இதற்காக  நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

சில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. சமீபத்தில் எனக்கு அபாயாகரமான புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டி இருந்தது. இந்த சோதனை மூலம் அபாயமான புற்று நோய் இருப்பது தெரியவந்தது. என கூறினார். 

மேலும் அவர் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் தனக்கு  ஆதரவு வழங்குவதற்காக நன்றி தெரிவித்தார், மேலும் அவர் நியூயார்க்கில் சிகிச்சைக்கு வருகிறேன்  என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனக்கு அனிஷாவுடன் திருமணம் நடிகர் விஷால் அதிகாரபூர்வ அறிவிப்பு
எனக்கு அனிஷாவுடன் திருமணம் என ட்விட்டரில் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார்.
2. ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சி -கணவர் நோட்டீஸ்
ஸ்ரீதேவி மரணத்தை மையப்படுத்தும் கண்சிமிட்டல் அழகி பிரியா வாரியார் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
3. ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் கிளாமராக நடிக்கும் பிரியா வாரியர்- டிரெய்லர்
ஸ்ரீதேவி வாழ்க்கை கதையான் அஸ்ரீதேவி பங்களாவில் பிரியா பிரகாஷ் வாரியர் கிளாமராக நடித்து உள்ளார். அதன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
4. பேட்ட, சர்கார், விஸ்வாசம் - ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்?
தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளில் வெளியான பேட்ட, சர்கார், விஸ்வாசம் ஆகியவற்றின் வசூல்களில் ரஜினிகாந்த், விஜய், அஜித் வசூலில் நம்பர் ஒன் யார்.
5. ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் முதல் நாள் வசூலில் முந்தியது யார்?
நேற்று வெளியான ரஜினியின் பேட்ட- அஜித்தின் விஸ்வாசம் ஆகியவை முதல் நாள் எப்படி உள்ளது? என்ற விவரம் வெளியாகி உள்ளது.