சினிமா செய்திகள்

பியூட்டி பார்லர் விவகாரம்: அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்; நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் அறிக்கை + "||" + We are coordinating with BMC officials: Madhu Chopra's spokesperson

பியூட்டி பார்லர் விவகாரம்: அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்; நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் அறிக்கை

பியூட்டி பார்லர் விவகாரம்:  அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம்; நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் அறிக்கை
மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் செயல்படுகிறோம் என நோட்டீஸ் விவகாரத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கூறியுள்ளார்.

மும்பை,

மகாராஷ்டிராவின் ஓஷிவாரா புறநகர் பகுதியில் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அதிநவீன பியூட்டி பார்லர் ஒன்று உள்ளது.  இந்த நிலையில், சட்டவிரோத முறையில் அவர் கட்டிட பணிகளில் ஈடுபடுகிறார் என கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளனர்.

இந்த நோட்டீசுக்கு சோப்ரா பதில் அளிக்கவில்லை எனில் சட்டவிரோத கட்டிட பகுதிகளை இடித்து தள்ளி விடுவோம் என அதிகாரிகள் நேற்று கூறியிருந்தனர்.

இதுபற்றி நடிகை பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா அறிக்கை ஒன்றில் கூறும்பொழுது, மும்பை மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து நாங்கள் நோட்டீஸ் பெற்றுள்ளோம்.  அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்.  தேவையான முறைப்படியான நடவடிக்கைகளை முன்பே எடுத்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.