சினிமா செய்திகள்

பாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா + "||" + Megha Vikram son pair

பாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா

பாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா
பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலா டைரக்டு செய்கிறார். 

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளனர். இன்னொரு புறம் கதாநாயகி தேர்வு நடந்தது. நிறைய புதுமுக நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா–ஜோதிகா மகளாக வந்த ஸ்ரேயா சர்மா, கவுதமி மகள் சுப்புலட்சுமி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. 

இப்போது மேகா என்ற மாடல் அழகியை துருவ் ஜோடியாக தேர்வு செய்துள்ளனர். இவர் ‘அமர் பிரேம்’ என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ளார். கதக் நடனம் கற்றவர். பாலா படம் மூலம் தமிழில் கதாநாயகியாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. சென்னையில் அரங்குகள் அமைத்து துருவ்–மேகா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். 

துருவ் நடிப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார். பாலா அவரை தேர்ந்த நடிகராக மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. பாலாவே இந்த படத்தை தயாரிக்கிறார். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கி பிரபலமான ராஜுமுருகன் வசனம் எழுதி உள்ளார்.