சினிமா செய்திகள்

அலட்டிக் கொள்ளாத மோகன்லால் + "||" + Mohan lol is Do not worry

அலட்டிக் கொள்ளாத மோகன்லால்

அலட்டிக் கொள்ளாத மோகன்லால்
திரைப்பட நடிகையின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர் நடிகர் திலீப்.
திரைப்பட நடிகையின் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நடிகர் திலீப்பை, மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்த விஷயம், பெரும் பிரளயத்தையே உண்டாக்கியிருக்கிறது. பல தரப்பிலும் இருந்து நடிகர் சங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது. கன்னட நடிகர் சங்கம் கூட நடிகர் திலீப்பை, சங்கத்தில் சேர்த்ததற்கு கண்டம் தெரிவித்திருந்தது.

ஆனால் நடிகர் சங்கத்தின் புதிய தலைவரான மோகன்லால் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதுபோலவே தெரியவில்லை என்கிறார்கள். ‘பொதுக்குழு கூட்டத்தில் அனைவரின் ஒப்புதலோடுதான் திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்ப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அது என்னுடைய தன்னிப்பட்ட விருப்பம் அல்ல. ஆனால் கூட்டத்திற்கு வராத சிலர் இதனை பெரிய பிரச்சினையாக உருவாக்கிவிட்டனர். அவர்களை கண்டுகொள்ள வேண்டாம்’ என்று கூறிவருகிறாராம்.

இதற்கிடையில் திலீப், ‘என் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தின் மூலமாக துடைத்தெறிந்த பிறகே நடிகர் சங்கத்தில் சேருவேன்’ என்று நடிகர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருக்கிறாராம். 


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்கத்துக்கு கடிதம் : மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கினர். இப்போது அவர் ஜாமீனில் வெளிவந்து இருக்கிறார்.
2. குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை நடிகர் திலீப்பை சங்கத்தில் சேர்ப்பது நிறுத்து வைப்பு - மோகன் லால்
குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை நடிகர் திலீப்பை அம்மா நடிகர்கள் சங்கத்தில் சேர்ப்பது நிறுத்தி வைக்கப்படுவதாக மோகன்லால் கூறி உள்ளார். #Mohanlal #AMMA #Dileep
3. மலையாள நடிகைகள் எதிர்ப்பு வலுக்கிறது திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்த்தது ரத்தாகுமா? செயற்குழுவில் ஆலோசனை
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்தது கேரளாவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
4. நடிகர் திலீப், கேரள ஐகோர்ட்டில் திடீர் மனு
கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17–ந் தேதி பிரபல நடிகை காரில் கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.