சினிமா செய்திகள்

நவம்பரில் ராஜமவுலி படம் + "||" + Rajamouli movie in November

நவம்பரில் ராஜமவுலி படம்

நவம்பரில் ராஜமவுலி படம்
தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் ‘பாகுபலி’ மூலமாக புகழ்பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் ராஜமவுலி.
 ‘பாகுபலி’ படத்தைப் போலவே மீண்டும் ஒரு மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருக்கிறார் ராஜமவுலி. இந்தப் படத்திலும் இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர்., மற்றொருவர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்.


‘ஆர்.ஆர்.ஆர்.’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறதாம்.

முதல் கட்டமாக ராம்சண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோரது தனித்தனியான காட்சிகளையும், இறுதியாக அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளையும் படம்பிடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.