சினிமா செய்திகள்

தம் இருந்தா நேர்ல வந்து பேசு; நான் தயார்- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம் + "||" + Actor Prakash Raj Furious

தம் இருந்தா நேர்ல வந்து பேசு; நான் தயார்- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்

தம் இருந்தா நேர்ல வந்து பேசு; நான் தயார்- நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்
என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள்,கோழைதான் கொல்வேன் என்பான், தம் இருந்தா நேர்ல வந்து பேசு;நான் தயார் என்று ஆவேசமாக பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். #PrakashRaj
சென்னை

மறக்க முடியுமா தூத்துக்குடியை?’ என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் கலந்துகொண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். 

அவர் பேசியதாவது, ‘’தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டவர்கள் விதைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி மட்டுமல்ல. எல்லா கட்சிகளும் எல்லா ஆட்சிகளும் ஒன்றுதான். இதில் ஒன்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. 

மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

பயம் இல்லாமலும் , தெளிவாகவும் நாம் பேச வேண்டிய நிலை உள்ளது. சுற்றி வளைத்து பேசவேண்டிய காலகட்டம் இதுவல்ல. நேரடியாக பேச வேண்டிய காலகட்டம் இது. நான் அரசியலில் தான் உள்ளேன். ஆனால் இவர்களை போல தேர்தல் அரசியலில் இல்லை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள். என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார்கள். கோழைதான் கொல்வேன் என்பான். தம் இருந்தா நேர்ல வந்து பேசு. நான் தயார் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.ஆசிரியரின் தேர்வுகள்...