வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!


வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
x
தினத்தந்தி 7 July 2018 8:38 AM GMT (Updated: 7 July 2018 8:38 AM GMT)

பேஸ்புக்கில் சமீபகாலமாக வைரலாகி இருப்பவர், ‘ஷோ சூயூ’. பேஸ்புக் வீடியோவில் இவர் விட்ட அம்பு, பல இளைஞர்களது இதயத்தை துளைத்தெடுத்து விட்டது.

தமிழக இளைஞர்கள் ஷோ சூயூவை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள். ‘ஜிமிக்கி கம்மல்’ செரின், ‘கண்ணழகி’ பிரியா வாரியர் வரிசையில் வைரலாகியிருக்கும் ஷோ சூயூவிற்கு புது சிக்கலும் உருவாகி இருக்கிறது. ஏனெனில் செரினின் நடனத்தையும், பிரியா வாரியரின் கண் சிமிட்டலையும் ரசித்தவர்கள், இந்த கொரிய அழகியை காதலியாக மாற்றி கொண்டுள்ளனர். அதனால் சமூக வலைத் தளங்களில் ஷோ சூயூவிற்கு போட்டா-போட்டி நடக்கிறது. ‘என்னுடைய ஆளு’, ‘என்னுடைய காதலி’, ‘என்னுடைய வருங்கால மனைவி’ என பங்குபிரித்து, அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை மும்முரமாக பகிர்ந்து வருகிறார்கள். ஒரே ஒரு வீடியோவில் ‘ஓகோ’ என பிரபலமாகியிருக்கும் ஷோ சூயூ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

* வில் அழகி பிறந்தது தைவானில். அங்குள்ள தைனன் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

* வில்லு விட்டு அசத்தியிருக்கும் நம்ம ஆளு, உண்மையிலேயே வில் வித்தை வீராங்கனை இல்லையாம். இவர் ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், நாடகத் தொடர்களில் நடித்து பிரபலமானவர். உண்மையை சொல்லப்போனால், இவர் ஒரு நடிகை.

* தென் கொரியாவில் வருடந்தோறும் நடிகர்-நடிகைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கமான ஒன்று. ‘ஐடியல் ஸ்டார் அத்லட்டிக் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் நாடக நடிகர்கள், மேடை நாடக கலைஞர்கள், சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அப்படி நடந்த போட்டியில்தான் நம்ம ஆளு, வில் அழகியாக பிரபலமாகியுள்ளார்.

* இவர் அம்பு விட்டதும், அம்பின் நுனி இவரது தலைமுடியை கோதி செல்ல, அது வீடியோவாக வெளியாகி, வைரலாகியது. இவரது தலைமுடி பறந்ததை பார்த்து ரசித்த நாம், அந்த அம்பு இலக்கை எட்டியதா என்பதை பார்க்க மறந்துவிட்டோம். உண்மையில் அந்த அம்பு, இலக்கை துளைக்கவில்லையாம். அதற்கு மாறாக இளைஞர்களின் இதயத்தைதான் துளைத்திருக்கிறது.

* இன்று வில் விட்டு அசத்தியிருக்கும் ஷோ, ஒரு காலத்தில் இதழ்களை குவித்து அசத்தியவர். ஆமாங்க, ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்தவர் தனது இதழ்களை முத்தம் கொடுப்பது போல குவித்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார். அது இணையத்தில் பரவ, அன்று அது வைரலாகியதாம்.

* இன்று பல நாடகங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நடித்து அசத்தும் ஷோ, சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆம்..! சிறுவயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது போன்று தத்ரூபமாக நடித்து பலமுறை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர அவரை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் முழு நேர நடிப்பிற்கு தயாராகியிருக்கிறார். இருப்பினும் பெற்றோரின் கரிசனத்தில் மீண்டும் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

*வில் அழகிக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதுவும் அவரது செல்லப்பிராணியான ‘கூஷி’ நாயை அதிக நேரம் கொஞ்சுவாராம்.



* இவரது செல்லப் பெயர் என்ன தெரியுமா...? ‘யோடா’. அட ஆமாங்க, ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் வரும் யோடா கதாபாத்திரத்தின் காதுகளை போன்று ஷோவின் காதுகளும் இருப்பதால், இவருக்கு இந்த பெயர் வந்ததாம். மேலும் யோடாவை போன்று காதுகளையும் அசைப்பாராம்.

* நாக்கை தலைகீழாக திருப்புவதும், கைகளை வழக்கத்திற்கு மாறாக திருப்புவதும், இந்த வில் அழகியின் கூடுதல் திறமைகள். இதை நிறைய மேடை நிகழ்ச்சிகளில் செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.

* இவரது சகோதரர்கள், ஷோவை சாக்லேட் என்று அழைக்கிறார்கள்.

* ‘டுவைஸ்’, ‘காட் 7’, ‘ஸ்டாப் ஸ்டாப் இட்’, ‘மிஸ் ஏ’, ‘ஒன்லி யூ’ போன்ற இசை ஆல்பம் குழுக்களிலும் ஷோ அங்கம் வகிக்கிறார்.

* ‘டுவைஸ்’ குழுவின் ஒரு இசை ஆல்பம் ஜேஜூ என்ற தீவில் படமாக்கப்பட்டது. அந்த தீவில் இயல்பாகவே முயல்கள் அதிகமாக நடமாடும். இருப்பினும் படப்பிடிப்பு சமயத்தில் ஷோவை ஏராளமான முயல்கள் சூழ்ந்துகொண்டனவாம். அவற்றை பிரிய மனமில்லாமல், கண்கலங்கியிருக்கிறார், ஷோ.

* ஒரு விளம்பரத்தில் ஸ்கேட் போர்ட் வீராங்கனையாக நடிப்பதற்காக, நிஜமாகவே ஸ்கேட் போர்ட் கற்றிருக்கிறார்.

* வில் அழகியை பெருமைப்படுத்துவதற்காக தென் கொரிய ரசிகர்கள், ‘சூயூ ஸ்கேட் டுவைஸ்’ என்ற மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதை ஏராளமானோர் தரவிறக்கம் செய்து விளையாடி வருகிறார்களாம்.

* தென் கொரியாவில் நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷோ, இரண்டுமுறை கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேற்றப்பட்டாராம். இருப்பினும் ‘வைல்-கார்ட்’ சுற்றில் உலக ரசிகர்களின் ஏகோபித்த வாக்குகளின் உதவியுடன் மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பி நடுவர்களை அசத்தியிருக்கிறார். 

Next Story