சினிமா செய்திகள்

புகைபிடிக்கும் காட்சி:“விஜய்யை மட்டும் கட்டம் கட்டுவது ஏன்?” + "||" + Smoking Scenes: "Why do you say only Vijay?"

புகைபிடிக்கும் காட்சி:“விஜய்யை மட்டும் கட்டம் கட்டுவது ஏன்?”

புகைபிடிக்கும் காட்சி:“விஜய்யை மட்டும் கட்டம் கட்டுவது ஏன்?”
டைரக்டர் நவீன் விஜய்க்கு ஆதரவாக ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்து இருக்கிறார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம், ‘சர்கார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ‘முதல் தோற்றம்’ கடந்த மாதம் வெளியானது. அதில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் இடம் பெற்று இருந்தது.

இதற்கு சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “புகைபிடிக்கும் காட்சியால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றும், “எனவே அந்த காட்சியை நீக்கவேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் டைரக்டர் நவீன் விஜய்க்கு ஆதரவாக ‘டுவிட்டரில்’ கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், “ஒரு மாஸ் ஹீரோவை பார்த்து மட்டும் புகைபிடிக்க ஆரம்பிக்கும் அளவுக்கு மக்கள் என்ன முட்டாளா? இதெல்லாம் சினிமா வருவதற்கு முன்பே வந்தவை. ஒரு நட்சத்திர நடிகரை மட்டும் ஏன் கட்டம் கட்ட வேண்டும்?’, என்று குறிப்பிட்டுள்ளார். டைரக்டர் நவீன் ‘மூடர் கூடம்’, ‘கொளஞ்சி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீனைப் போல் திரையுலக முக்கிய பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.